சவால்கள் நிறைந்த தருணத்தில் சம்பந்தன் ஐயா ஏற்றுள்ள எதிர்க்கட்சிப் பதவி

இலங்கையில் ஒரு ஸ்தீரணமற்ற அரசியல் நிலை தோன்றியுள்ள நிலையில் பாராளுமன்றத்தில் தமிழர் தரப்பிற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிட்டியுள்ளது. இந்தப் பதவியானது ஒரு வெள்ளித்தட்டில் வைத்து அவர்தம் கைகளில் கொடுக்கப்படவில்லை. இனவாத முலாம் பூசப்பட்ட ஒரு இரும்புத் தட்டில் தான் இந்த பதவி சம்பந்தன் ஐயாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழ் மக்களுக்கு மட்டுமே உள்ள பிரச்சனைகள் உள்ளன. தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் போன்ற அனைத்து இனங்களுக்கும் உள்ள பொதுவான ப்pரச்சனைகள் பலவும் நாட்டில் பரவிக் கிடக்கின்றன. இதை நாம் மட்டுமல்ல, உலகமே நன்கு அறிந்து வைத்துள்ளது. எனவேதான் உலகநாடுகளில் பல நமது இலங்கையை நோக்கி எப்போதுமே பார்வையை செலுத்தி வருகின்றன. மேலும் படிக்க…