“சர்வ தேசத்தை உலுக்கிய விடுதலைப் புலிகளின் “சத்திய யுத்தத்திற்கு” தனது சாரீரக் குரலால் பலத்தைக் கொடுத்த பாடகர் சாந்தன் வன்னி மண்ணில் விதைக்கப்படுகின்றார்” .

கனடாவில் தலைமைச் செயலகத்தைக் கொண்டு இயங்கிவரும்

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைமைச் செயலகம் விடுத்துள்ள அஞ்சலிச் செய்தி”

“எமது மண்ணை மீட்டெடுப்பதற்காக, விடுதலைப் புலிகள் நடத்திய போராட்டத்தை புகழ்ந்து, பல்வேறு கவிஞர்கள் மிகவும் உச்சமான கவிதை வரிகளை எழுதி வைத்தார்கள். அவர்களில் சிலர் இராணுவக் கொடியவர்களால் அழிக்கப்பட்டுவிட்டார்கள் சிலர் இன்னும் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவ்வாறாக கவிஞர்களில் ஒருவர் எழுதிய கவிதை வரிகளை இந்த வித்துவப் பாடகனுக்கு சமர்ப்பணம் செய்து அவருக்கு வீர வணக்கங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
“சத்திய யுத்தம் நடக்கிறது சாவிலும் நிம்மதி தெரிகிறது
, எத்தனை யுகங்கள் கடந்தாலும் ஈழத்தை அ டைவது நிச்சயமே”
என்ற அந்த கவிதை வரிகள் சாந்தனை ஈர்ததி;ருக்;கும் என்றே நம்புகின்றோம். கவிஞர் புதுவை இரத்தினதுரை, கவிஞர் காசி ஆ னந்தன், கவிஞர் பத்மநாதன் போன்ற உணர்வு கொண்ட கவிஞர்களின் வரிகளை தனது காந்தக்குரல்களால் தீரத்துடனும் தித்தித்திப்புடனும் பாடல்களாக எமது அளித்துச் சென்றுள்ள பாடகர் சாந்தன் இன்று எம்மத்தியில் இல்லை, ஆனால் வன்னி மண்ணில் ஆயிரக்கணக்கான மேடைகளையும் எமது உறவுகள் புலம்பெயர்ந்து வாழும் ஐரோப்பிய நாடுகளில் பல மேடைகளையும் அலங்கரித்த இந்த பாடகன் சாந்தன் அவர்கள், வன்னி மண்ணில் விதைக்கப்பட்டாலும், லட்சக்கணக்கான எமது உறவுகளின் இதங்களில் என்றுமே வாழ்வார்.

இவரது ஆத்மா கடல்கடந்தும் வானலைகளைகளில் சஞ்சரித்த வண்ணமும் எமக்கு தென்பினைத் தரும் என்று நாம் நம்புகின்றோம்.

இவ்வாறன மக்கள் கவிஞனின் மறைவிற்கு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைமைச் செயலகம் தனது அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்கின்றது

இவ்வாறு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் திரு துரை கணேசலிங்கம், அதன் அகிலத் தலைவர் கனடாவாழ் திரு வி. எஸ். துரைராஜா ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அனுதாப அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள்.

மேற்படி அறிக்கையில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

தமிழீழ எழுச்சிப் பாடகராக விளங்கி தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் அதி உன்னத இசைப் பணியாற்றி மரணத்தை தழுவிய “மாமனிதர்” எஸ்.ஜீ. சாந்தனின் இறுதிக்கிரியைகள் மாங்குளத்தில் நடைபெறவுள்ளது. மாங்குளம் மண் வீரம் செறிந்த பல தாக்குதல்களைத் தரிசித்த பூமி. அந்த மண்ணில் இந்த புரட்சிப் ◌பாடகனின் உடல் விதைக்கப்பட வுள்ளமை, வரலாற்றுச் சின்னமாகவே விளங்கும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.

சாந்தனின் காந்தக் குரல் சர்வதேசத்தையே ஈர்த்தது என்றால் அது மிகையாகாது. அவரது குரலுக்குள் அடங்கும் எந்த சாதாரண வரிகள் கூட விடுதலைப் புலிகள் இயக்கத்தின்; தவைர் மேதகு பிரபாகரன் அவர்களுடடைய மேன்மையை இசையோடு நாம் ரசிக்க கைகொடுத்து நின்றது. விடுதலைப் புலிகளின் போராளிகளின் தீரம் மிகு இராணுவ ஆற்றலை வெளிப்படுத்தும் ஒரு உன்னதக் எக்காளமாக விளங்கியது. இவ்வாறான ஒரு அற்புதப் பாடகன், என்றும் எமது இதயங்களில் நிறைந்து நிற்பான்’