சர்வாதிகாரத்துடன் செயல்படுகிறார் பிரதமர்: டிகேஎஸ் இளங்கோவன் குற்றச்சாட்டு

சர்வாதிகாரத்துடன் பிரதமர் மோடி செயல்பட்டு வரு கிறார் என மாநிலங்களவை திமுக உறுப்பினர் டிகேஎஸ் இளங் கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.
இறைச்சிக்காக மாடுகள் விற் பதற்கு மத்திய அரசு தடை விதித் துள்ளதைக் கண்டித்து திராவிடர் கழ கம் சார்பில் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடை பெற்றது.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடை பெற்ற இந்தப் பொதுக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலை வர் தா.பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மமக தலைவர் ஜவாஹிருல்லா, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பீமராவ், காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ உ.பலராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் டிகேஎஸ் இளங் கோவன் பேசியதாவது: மக்கள் எதை உண்ண வேண்டும்? எதை உண்ணக்கூடாது என்பதில் தலை யிட அரசுக்கு அதிகாரம் இல்லை. உணவு என்பது மக்களின் அடிப் படை உரிமையாகும். ஆனால், இதையெல்லாம் மீறி சர்வாதிகாரத் துடன் இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய பாஜக அரசு தடை செய்துள்ளது.
கடந்த 70 ஆண்டுகளில் காங் கிரஸ் அரசு செய்யாததை மூன்றே ஆண்டுகளில் பாஜக அரசு செய் திருப்பதாக அக்கட்சியின் தலைவர் கள் கூறுகின்றனர். என்ன செய்தீர் கள் என்று கேட்டால், அதற்கு அவர்களிடம் பதில் இல்லை. சர்வாதிகாரிகள் எப்போதும் செய் யாததை செய்ததாக சொல்வார்கள், மக்களை ஏமாற்றுவார்கள்.
ஹிட்லர் செய்ததையெல்லாம் மோடி இப்போது செய்துகொண் டிருக்கிறார். மாட்டு இறைச்சிக்கான தடையும் அதில் ஒரு பகுதிதான். ஹிட்லருக்கு ஏற்பட்ட நிலைதான் மோடிக்கும் ஏற்படும் என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.