- எழுத்தாளர் சல்மான் ருஷ்டி உடல்நிலை முன்னேற்றம்
- டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி...!
- தமிழகத்துக்கு நன்றி தெரிவித்து செஸ் வீரர்கள் நெகிழ்ச்சியுடன் பிரியாவிடை
- மாஜி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்களாவில் புலனாய்வு அதிகாரிகள் ரெய்டு ஏன் ?
- 5வது நாளாக தொடரும் போர் பயிற்சி : தைவான் ஜலசந்தியில் சீனா அடாவடி

சர்வதேச புத்தமத கூட்டமைப்பில் தர்ம சக்ரா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நாளை உரை
சர்வதேச புத்தமத கூட்டமைப்பு சார்பில் நாளை( 4 ம் தேதி) கொண்டாடப்பட உள்ள தர்ம சக்ரா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.
இந்திய அரசின் கலாசாரத்துறை தலைமையின் கீழ் சர்வதேச புத்தமத கூட்டமைப்பு ஆசாத் பூர்ணிமா தினத்தை தர்மசக்ரா தினம் கொண்டாடப்பட உள்ளது. புத்த மதத்தவர்களும், இந்து மதத்தவர்களும் தங்களின் குருக்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த தினத்தை கொண்டாடுகின்றனர்.
இந்த விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி, மனிதர்களின் துன்பங்களை போக்க புத்தர் வழங்கிய போதனைகள் குறித்து வீடியோ மூலம் உரையாற்ற உள்ளார். நிகழ்ச்சியில் கலாசாரத்துறை அமைச்சர் பிரகலாத் படேல், மற்றும் சிறுபான்மை விவகாரத்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கலந்து கொள்கின்றனர்.
சாரநாத் மற்றும் புத்த கயாவில் நடக்கும் நிகழ்ச்சிகளின் போது உலகின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த புத்த மத தலைவர்கள் மற்றும் அறிஞர்களின் உரைகள் நேரலையாக உலகம் முழுவதும் ஒளிபரப்ப உள்ளது. இதனை சுமார் 30 லட்சம் பக்தர்கள் கண்டுகளிப்பார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.