சம்பந்தர் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பது ரணில் விக்கிரமசிங்கவிலும் பார்க்க மகிந்த தரப்பிற்கே நன்மை

யாழ்ப்பாண மக்கள் தினசரி “வலம்புரி” சுட்டிக் காட்டுகின்றது

இடையிடையே எதிர்க்கட்சித் தலைவர் பதவி மீது மகிந்த தரப்பு கண் வைப்பது ஏன் என்றால் மறந்தும் சர்வதேச போர்க்குற்ற விசார ணையை இரா.சம்பந்தர் வலியுறுத்தக்கூடாது என்பதற்கான ஒரு எச்சரிக்கும் நடவடிக்கையாகத்தான் மகிந்த தரப்பு அதனைச் செய்கிறது என்பதே உண்மையிலும் உண்மை. இதனால் மகிந்தா தரப்பிற்குத் தான் நன்மை என்பதே முடிந்த முடிவு.

இவ்வாறு யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் மக்கள் தினசரியான “வலம்புரி” சில நாட்களுக்கு முன்னர் எழுதிய தனது ஆசிரிய தலையங்கத்தில் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் தொடர்ந்தும் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பார் என்று சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பு எதிர்பார்க்கப்பட்டதொன்றே.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை மகிந்த ராஜபக்­ அணி பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தால், அது எப்பவோ சாத் தியமாகி இருக்கும். அப்படியயாரு எண்ணம் மகிந்த ராஜபக்­ அணியிடம் அறவே இல்லை.
இதற்குக் காரணம் தாங்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதைவிட, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் எதிர்க்கட்சித் தலைவ ராக இருப்பதுதான் தமக்குப் பாதுகாப்பு என்பது மகிந்தவின் தரப்பினர்க்கு நன்கு தெரியும். இதன்காரணமாகவே அவர்கள் சம்பந்தர் இருக்கட்டும் என்று விட்டுவிட்டனர்.

மகிந்த தரப்பின் இந்த இராஜதந்திரம் தமிழ் மக்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது என்பது வெளிப்படையான உண்மை. அதாவது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தருக்கு வழங்கியதால் தமிழ் மக்களின் உரிமைகள், சர்வதேச போர்க்குற்ற விசாரணை, காணாமல் போனவர்களின் விவகாரம், தமிழ் அரசியல் கைதிகளின் விடயம் போன்ற அத்தனையி லும் பேசாதிருத்தல் என்ற முடிவை கூட்டமைப் பின் தலைமை எடுத்துக் கொண்டது.

எங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி யைத் தந்துள்ளதனால், அதற்குக் கைமாறாக்
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் நிபந் தனைகளை நிறைவேற்ற இலங்கை அரசுக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை முதல் வரவு செலவுத் திட்டத்தை ஆத ரித்தல், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில் லாப் பிரேரணையை தோற்கடித்தல் என சகல வழிகளிலும் இலங்கை அரசாங்கத்துக்கு எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தர் அவர்கள் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றார்.

இதை நாம் கூறும்போது, பிரதமருக்கு எதி ரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கூட்ட மைப்பினர் எதிர்த்தது மகிந்த தரப்புக்கு நன்மையா என்று நீங்கள் கேள்வி எழுப்பினால், இங்கு தான் ஒப்பீட்டு நன்மை என்ற விடயம் மேலெழும்.
அதாவது பிரதமர் ரணிலை கூட்டமைப்பினர் ஆதரிப்பது மகிந்த தரப்புக்கு இடையூறாயினும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் சர்வ தேச போர்க்குற்ற விசாரணை தேவை என்று பாராளுமன்றத்திலும் உலக நாடுகளிடமும் சதா கேட்டுக் கொண்டால்,  அதனால் ஏற்படுகின்ற விளைவு மகிந்த தரப்புக்கு மிகமோசமானதாக இருக்கும்.அதனால்தான் சம்பந்தர் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பது ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசுக்கு நன்மை என்றா லும் அதைவிட்ட நன்மை தமக்கு என்று ஒப் பீட்டு அடிப்படையிலேயே மகிந்த தரப்பு இரா. சம்பந்தர் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதை முழுமனதோடு ஆதரிக்கின்றது.

இதை நாம் கூறும்போது அப்படியானால் இடையிடையே எதிர்க்கட்சித் தலைவர் பதவி மீது மகிந்த தரப்பு கண் வைப்பது ஏன் என்று நீங்கள் கேட்டால், மறந்தும் சர்வதேச போர்க்குற்ற விசார ணையை இரா.சம்பந்தர் வலியுறுத்தக்கூடாது என்பதற்கான ஒரு கவனயீர்ப்பு நடவடிக்கையா கத்தான் மகிந்த தரப்பு அதனைச் செய்கிறது என்பதே உண்மையிலும் உண்மை. இதை நாம் கூறும் அதேவேளை எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தர் நீடிப்பது தமிழர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது என்பதற் கான அறிகுறியாகும்.