சம்பந்தன், மாவை, சுமந்திரன் அரசியலிலிருந்து விலகினால் விடிவு தமிழ் மக்களுக்கு ஏற்படும் என்கிறார் வி. ஆனந்தசங்கரி

இரா.சம்பந்தன், மாவை சேனா திராசா மற்றும் சுமந்திரன் ஆகி யோர் அரசியலில் இருந்து விலகினால்தான் தமிழ் மக்களுக்கு விடிவு ஏற்படும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் உள்;ராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையி லான ஈ.பி,ஆர்.எல்.எவ் மற்றும் சிறு சிறு கட்சிகள் ஆனந்த சங்கரி தலைமையிலான தமி ழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து உதயசூரியன் சின்னத்தில் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரில் உள் ;ராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிடுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. முன்னர் எப்போதும் இல்லாத வகையில் பதவி ஆசைகளும் பணம் தொடர்பான ஆசைகளும் பணப் பரிமாற்றங்;களும் தமிழகத்தைப் போன்று எமது தமிழர் பிரதேசங்களில் அரசியல் விடங்களில் ஊடுறுவியுள்ளதாகவும். இந்திய அரசாங்கம் கூட இந்த விடயங்களில் தமது முகவர்கள் ஊடாக இந்த செயல்களை ஊக்குவித்து வருவதாகவும் விடயமறிந்த யாழ் புத்திஜீவிகள் சிலர் கனடா உதயனுக்குத் தெரிவித்துள்ளார்கள்.