சம்ஜவுதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: 4 பேர் விடுதலை

சம்ஜவுதா குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேரையும் விடுதலை செய்து தேசிய புலனாய்வு முகமை கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கடந்த, 2007 பிப்ரவரி 18ம் தேதி, அரியானா மாநிலம் பானிபட் அருகே, சம்ஜவுதா விரைவு ரயிலில் குண்டு வெடித்து, 68 பேர் பலியாகினர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். சாமியார் அசீமானந்த், லோகேஷ் சர்மா, கமல் சவுகான், ரஜிந்தர் சவுத்ரி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அரியானாவின் பஞ்சகுலாவில் உள்ள என்ஐஏ சிறப்பு கோர்ட்டில் நடந்த இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேரையும் விடுதலை செய்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.