- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: இலங்கையிலும் ஐயப்ப பக்தர்கள் போராட்டம்
சபரிமலையில் ஐப்பசி மாத பூஜைக்காக நாளை மறுதினம் நடை திறக்கப்படும் நிலையில், கேரளா, தமிழகத்தை தொடர்ந்து இலங்கையிலும் சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் வலுப்பெறத் தொடங்கி உள்ளன.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயதுடைய பெண்கள் செல்ல நூற்றாண்டுகளாகத் தடை இருக்கிறது. இந்தத் தடையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம் எனத் தீர்ப்பளித்தது.
இந்நிலையில், தமிழகத்திலும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள், பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஐப்பசி மாத பூஜைக்காக அக். 17-ம் தேதி மாலை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப் பட உள்ளது. இதனிடையே, இந்தப் போராட்டம் தற்போது இலங்கையிலும் பரவி வருகிறது.
இலங்கையிலுள்ள வவுனியா வில் சபரிமலை ஐயப்பன் கோயி லில் பெண்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கிய இந்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து அங்கு வசிக்கும் ஐயப்ப பக்தர்கள் கண்டனப் பேரணி நடத்தினர். வன்னி மாவட்ட ஐயப்ப சுவாமிகள் ஒன்றியம் இந்தப் பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
இந்தப் பேரணி வவுனியாவில் உள்ள கந்தசாமி கோயில் முன்பாகத் தொடங்கி அந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது. திரளான பெண்களும் இதில் கலந்துகொண்டனர்.
பேரணியின் முடிவில் ஆட்சியர் ஹனிபாவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மேலும் இலங்கை யில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடமும் இது தொடர் பான கோரிக்கை மனு அளிக்கப் பட்டது.