சபரிமலைக்கு கள்ளப்பயணமாக சென்ற கனகதுர்காவை, கணவர் வீட்டை விட்டு துரத்தியடித்தா

சபரிமலைக்கு கள்ளப்பயணமாக சென்று வழிபாடு நடத்திய கனகதுர்காவை, கணவர் வீட்டை விட்டு துரத்தியடித்தார். அவரை வீட்டில் சேர்க்கவும் மறுத்துவிட்டார்.
கம்யூ., கொள்கைகளை கொண்ட பிந்து(40), கனகதுர்கா(39) என்ற இரண்டு பெண்கள் ஜன.,2 அன்று கள்ளத்தனமாக சபரிமலை சென்று வழிபாடு நடத்தினர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், அவர்கள் இருவரும் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் பலத்த பாதுகாப்புடன் அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வீட்டிற்கு சென்ற கனகதுர்காவை அவரது மாமியார் தாக்கியதால், தலையில் காயமடைந்து, கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் சிகிச்சை முடித்த பின்னர், கனகதுர்கா, மலப்புரம் மாவட்டம் பெரின்தலமன்னா தாலுகா, அங்காடிபுரத்தில் உள்ள கணவர் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்றார். ஆனால், கணவர் கிருஷ்ணன் உன்னி மாமியார், குழந்தைகள் கனகதுர்காவை வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்து விட்டனர். கணவர், மாமியார் மற்றும் இரண்டு குழந்தைகளும் கதவை பூட்,டி சாவியுடன் வேறு இடத்திற்கு சென்று விட்டனர்.
பின்னர் போலீசார், கிருஷ்ணன் உன்னியை போலீஸ் ஸ்டேசன் அழைத்து பேசினர். அப்போதும், கனகதுர்காவை உடன் அழைத்து செல்ல, அவர் மறுத்து விட்டார். இதனையடுத்து, போலீசார் அவரை பெரின்தலமன்னாவில் உள்ள பெண்கள் காப்பகத்தில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு பெண் சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.