சந்தன பேழையில் கருணாநிதியின் வாசகம்

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் மாலை 4 மணிக்கு துவங்க உள்ளது. ராஜாஜி ஹால், சிவானந்தா சாலை, வாலஜா சாலை வழியாக, அண்ணா சதுக்கத்திற்கு எடுத்து செல்லப்பட உள்ளது.

கருணாநிதியை அடக்கம் செய்வதற்காக சந்தன பேழை தயார் செய்யப்பட்டுள்ளது. அதில், ” ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்” என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.33 ஆண்டுகளுக்கு முன் அண்ணாதுரையின் சமாதியின் அருகே அடக்கம் செய்யும் போது, தனது சமாதியில் பொறிக்கப்பட வேண்டும் என இந்த வாசகத்தை கருணாநிதி குறிப்பிட்டிருந்தார். அதே வாசகம் தற்போது பொறிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதியை அடக்கம் செய்ய சந்தன பேழை தயார் செய்யப்பட்டுள்ளது. அதன்மீது “ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்” என்ற அந்த வாசகம் எழுதப்பட்டிருந்தது. அது கருணாநிதி எழுதிய வாசகம்தான். தான் இறந்தால் சவப்பெட்டியில் இந்த வாசகத்தை குறிப்பிடவேண்டுமென கருணாநிதி 33 ஆண்டுகளுக்கு முன்பே குடும்பத்திர் மற்றும் கட்சியினரிடம் கூறியுள்ளார். அவரது விருப்பப்படியே சந்தனப்பேழையில் மேற்கண்ட வாசகம் குறிப்பிடப்பட்டுள்ளது.