சட்டசபை தேர்தலில் மஹாராஷ்டிராவில், அரியானாவிலும் பா.ஜ., அமோகமாக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மஹாராஷ்டிராவில் பா.ஜ.,- சிவசேனா கூட்டணியே அமோகமாக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது. அரியானாவிலும் பா.ஜ., வே ஆட்சியை மீண்டும் தக்க வைக்கிறது. தேர்தலுக்கு பிந்தைய பல்வேறு டி.வி மற்றும் பத்திரிகைகளின் கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளது.

இந்தியா டுடே கருத்துக்கணிப்பு

ஆக்ஸிஸ் மை இந்தியா, இந்தியா டுடே இணைந்து நடத்திய கருத்து கணிப்பில்; மஹாராஷ்டிராவில் பா.ஜ., – சிவசேனா, கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பா.ஜ.,166 முதல் – 194 , காங் 72 முதல் 90 தொகுதிகளை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது.

இதுபோல் அரியானாவில் மீண்டும் பா.ஜ.,வே ஆட்சியை பிடிக்க இருப்பதாகவும் இந்தியா டுடே கூறியுள்ளது.

ரிபப்ளிக் டி.வி

ரிபப்ளிக் டி.வி. நடத்திய கருத்துக்கணிப்பில் , மஹாராஷ்டிரா , அரியானாவில் பா.ஜ., வே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் கூறியுள்ளது.

மஹாராஷ்டிராவில், பா.ஜ., 135 லிருந்து 142 தொகுதிகளும் சிவசேனா 81 லிருந்து 88 தொகுதிகளும் காங்., 20 லிருந்து 24 தொகுதிகளும் தே.காங்., 30 லிருந்த 35 தொகுதிகளிலும்
மற்றவை 8 லிருந்து 12 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

அரியானாவில் ,பா.ஜ., 52 லிருந்து 63 தொகுதிகளிலும் காங்., 15 லிருந்து 19 தொகுதிகளிலும்
லோக்தள் 1 தொகுதியிலும் மக்கள் ஜனநாயக கட்சி 5 லிருந்து 9 தொகுதிகளிலும் மற்றவை
7 லிருந்து 9 தொகுதிகளை கைப்பற்றும் என ரிபப்ளிக் டி.வி கணிப்புகள் தெரிவிக்கின்றன.

டைம்ஸ் நவ் கணிப்பு

டைம்ஸ் நவ் கணிப்பு நடத்திய கணிப்பில்;மஹாராஷ்டிராவில் பா.ஜ., -230 தொகுதிகளிலும் காங்.,-48 தொகுதிகளிலும் மற்றவை 10 தொகுதிகளிலும் வெற்றி பெறும் .

அரியானா வில் பா.ஜ., 71 தொகுதிகளிலும் காங்.,11 தொகுதிகளிலும் மற்றவை 2 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என டைம்ஸ் நவ் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

நியூஸ்எக்ஸ்

நியூஸ்எக்ஸ் நடத்திய கணிப்பில் ; மஹாராஷ்டிராவில் பா.ஜ., 144 லிருந்து 150 தொகுதிகளிலும் சிவசேனா 44 லிருந்து 50 தொகுதிகளிலும் காங்., 40 லிருந்து 50 தொகுதிகளிலும் தே.காங்., 34 லிருந்து 39 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என நியூஸ்எக்ஸ் கணிப்புகள் தெரிவித்துள்ளன.