சசிகலா பரோலில் வர விரும்பினால் ஏற்பாடு செய்யப்படும்: டி.டி.வி. தினகரன்

சசிகலா பரோலில் வர விரும்பினால் அதற்கான ஏற்பாடு செய்து தரப்படும் என்று அதிமுகவின் துணை பொதுச் செயலாளர் டி.டிவி. தினகரன் கூறியுள்ளார்.
சசிகலாவின் இரண்டாவது அண்ணன் வினோதகனின் மகன் மகாதேவன் இன்று (சனிக்கிழமை) திருவிடைமருதூர் கோவிலுக்கு செல்லும் வழியில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார்.
இதனையடுத்து மகாதேவனுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக டி.டி.வி. தினகரன் தஞ்சை சென்றுள்ளார்.
மகாதேவன் மரணம் குறித்து டி.டி.வி தினகரன் கூறும்போது, “மகாதேவன் மரணம் குறித்து சசிகலாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சசிகலா பரோலில் வர விரும்பினால் அதற்கான ஏற்பாடு செய்து தரப்படும்” என்று கூறினார்.