கோஹ்லி இரட்டை சதம்: வெற்றியை நோக்கி இந்தியா

மும்பை டெஸ்டில் ‘புயல்’ வேகத்தில் ரன் சேர்த்தகேப்டன் கோஹ்லி இரட்டை சதம் கடந்தார். இவரதுஅபார ஆட்டம் கைகொடுக்க, இந்திய அணி வெற்றியின்விளிம்பில் உள்ளது. இங்கிலாந்து அணி மீண்டும்ஏமாற்றம் அளித்தது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள்கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல்மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2–0 எனமுன்னிலை வகிக்கிறது. நான்காவது டெஸ்ட்,மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடக்கிறது.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 400 ரன்கள் எடுத்தது. மூன்றாம் நாள் முடிவில்,முதல் இன்னிங்சில் இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 451 ரன்கள் எடுத்திருந்தது.

கோஹ்லி அபாரம்:

நேற்று நான்காம் நாள் ஆட்டம் நடந்தது. இந்திய அணிக்கு கேப்டன் விராத் கோஹ்லி,ஜெயந்த் யாதவ் நம்பிக்கை அளித்தனர். இங்கிலாந்து பந்துவீச்சை எளிதாக சமாளித்தஇவர்கள், அணியின் ஸ்கோரை சீராக உயர்த்தினர். அபாரமாக ஆடிய கோஹ்லி,டெஸ்ட் அரங்கில் 3வது முறையாக இரட்டை சதமடித்தார். மறுமுனையில் ஜெயந்த்யாதவ், தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். எட்டாவது விக்கெட்டுக்கு 241ரன்கள் சேர்த்த போது, ரஷித் ‘சுழலில்’ ஜெயந்த் (104 ரன், 15 பவுண்டரி) சிக்கினார்.வோக்ஸ் பந்தை சிக்சருக்கு அனுப்பிய கோஹ்லி, 235 ரன்னில் (25 பவுண்டரி, ஒருசிக்சர்) ஆட்டமிழந்தார்.

முதல் இன்னிங்சில் இந்திய அணி 631 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. இங்கிலாந்துசார்பில் ரஷித் 4, மொயீன் அலி, ஜோ ரூட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

ஜடேஜா அசத்தல்:

பின், 231 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை துவக்கியஇங்கிலாந்து அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி தந்தார் புவனேஷ்வர். இவரது‘வேகத்தில்’ ஜென்னிங்ஸ் ‘டக்–அவுட்’ ஆனார். ஜடேஜா ‘சுழலில்’ கேப்டன் அலெஸ்டர்குக் (18), மொயீன் அலி (0) சிக்கினர். ஜோ ரூட் அரைசதம் கடந்து ஆறுதல் தந்தார். இவர், 77 ரன்கள் எடுத்த போது ஜெயந்த் ‘சுழலில்’ அவுட்டானார். இரண்டு முறை கண்டம்தப்பிய பேர்ஸ்டோவ் அரைசதமடித்தார். அஷ்வின் ‘சுழலில்’ ஸ்டோக்ஸ் (18), ஜாக் பால்(2) ஆட்டமிழந்தனர்.

நான்காம் நாள் ஆட்டநேர முடிவில், இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 6விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்து, 49 ரன்கள் பின்தங்கி இருந்தது. பேர்ஸ்டோவ் (50)அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் ஜடேஜா, அஷ்வின் தலா 2 விக்கெட்கைப்பற்றினர்.

வெற்றி வாய்ப்பு:

இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்தின் எஞ்சிய விக்கெட்டுகளைவிரைவில் கைப்பற்றும் பட்சத்தில், இந்திய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் தொடரை, 3–0 என கைப்பற்றலாம்.

ஷமி, சகா ‘அவுட்’

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்டில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஷமி (வலதுமுழங்கால்), விக்கெட் கீப்பர் சகா (தொடை பின்பகுதி) காயத்தால் பங்கேற்கவில்லை.எதிர் வரும் ஐந்தாவது டெஸ்டிலும் (டிச.16–20, சென்னை) இந்த இருவரும் பங்கேற்கமாட்டர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் போர்டு செயலர் அஜய் ஷிர்கே வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘ ஷமி,சகா இன்னும் காயத்திலிருந்து முழுமையாக குணமாகவில்லை. இவர்கள் மீண்டு வர,பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொள்ள உள்ளனர்.இதனால், இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் பங்கேற்க மாட்டார்கள்,’’ எனதெரிவித்துள்ளார்.

இதனால், விக்கெட் கீப்பராக பார்த்திவ் படேல் தொடருவார்.

அம்பயர் தவறு

ஜடேஜா வீசிய 36வது ஓவரின் முதல் பந்தில் இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோவுக்குஅம்பயர் ஆக்சன்போர்டு ’அவுட்’ கொடுத்தார். இதற்கு டி.ஆர்.எஸ்., முறையில்பேர்ஸ்டோவ் ‘அப்பீல்’ செய்தார். ‘டிவி’ ரிப்ளேவில் ஜடேஜா ‘நோ–பால்’ வீசியதுதெரியவர ‘அவுட்’ திரும்பப் பெறப்பட்டது.

இதேபோல, அஷ்வின் வீசிய 40வது ஓவரின் முதல் பந்தில் இங்கிலாந்தின்பேர்ஸ்டோவுக்கு எல்.பி.டபிள்யு., முறையில் அம்பயர் ஆக்சன்போர்டு ‘அவுட்’வழங்கினார். இதற்கு பேர்ஸ்டோவ் ‘அப்பீல்’ செய்தார். பந்து ‘பேடில்’ பட்டுச் சென்றதுதெரியவர, ‘அவுட்’ திரும்பப் பெறப்பட்டது.4

மும்பை டெஸ்டில் அறிமுகமான இங்கிலாந்தின் ஜென்னிங்ஸ், முதல் இன்னிங்சில்சதமடித்தார். இரண்டாவது இன்னிங்சில் ‘டக்–அவுட்’ ஆனார். இதன்மூலம் அறிமுகடெஸ்டில் சதம், ‘டக்–அவுட்’ ஆன 4வது வீரரானார். இதற்கு முன், இந்தியாவின்குண்டப்பா விஸ்வநாத் (0, 137 ரன், எதிர்–ஆஸி., 1969, இடம்: கான்பூர்), தென்ஆப்ரிக்காவின் ஹட்சன் (163, 0, எதிர்–வெ.இ., 1992, இடம்: பிரிட்ஜ்டவுன்),பாகிஸ்தானின் முகமது வாசிம் (0, 109* ரன், எதிர்–நியூசி., 1996, இடம்: லாகூர்) ஆகியோர்தங்களது அறிமுக போட்டியில் சதம் மற்றும் ‘டக்–அவுட்’ ஆகினர்.

10

பொறுப்பாக ஆடிய இங்கிலாந்தின் ஜோ ரூட் 77 ரன்கள் எடுத்தார். இவர், இந்தியாவுக்குஎதிரான டெஸ்டில் 10வது முறையாக ஒரு இன்னிங்சில் 50 அல்லது அதற்கு மேல் ரன்எடுத்துள்ளார்.