கோவா முதல்வராக பிரமோத் சாவந்த்

கோவாவின் புதிய முதல்வராக, பா.ஜ., மூத்த தலைவர், பிரமோத் சாவந்த், 46, நேற்றிரவு பதவியேற்றார். கூட்டணி கட்சிகளான, மஹாராஷ்டிரவாதி கோமாந்தக் கட்சியின் சுதீன் தவாலிகர், கோவா பார்வர்டு கட்சியை சேர்ந்த விஜய் சர்தேசாய் ஆகியோருக்கு,துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
கோவா முதல்வராக பிரமோத் சாவந்த்.
கோவாவில், முதல்வர் மனோகர் பரீக்கர் தலைமையில், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்டிருந்த பரீக்கர், நேற்று முன்தினம் இறந்தார். இதையடுத்து, கோவாவில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது.கோவா சட்டசபைக்கு, 2017ல் நடந்த தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள, 40 தொகுதிகளில், 14 இடங்களை பிடித்து, தனிப்பெரும் கட்சியாக, காங்., உருவெடுத்தது. எனினும், 12 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த, பா.ஜ., மஹாராஷ்டிரவாதி கோமாந்தக் கட்சி, கோவா பார்வர்டு கட்சி மற்றும் சுயேச்சைகளின் ஆதரவுடன், ஆட்சி அமைக்க முயற்சித்தது. அப்போது, ராணுவ அமைச்சராக இருந்த பரீக்கர், மீண்டும் முதல்வராக பதவியேற்றால், ஆதரவு தருவதாக, கூட்டணி கட்சிகள் தெரிவித்தன. இதையடுத்து, ராணுவ அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பரீக்கர், கோவா முதல்வராக, பதவியேற்றார். இது காங்., கிற்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. பரீக்கர் உடல் நிலை பாதிக்கப்பட்டதிலிருந்தே, கோவாவில், பா.ஜ., கூட்டணி அரசுக்கு சிக்கல் ஏற்பட துவங்கியது.பரீக்கர் பரீக்கருக்கு பதிலாக, வேறு ஒருவரை முதல்வராக நியமிக்க, பா.ஜ., தலைமை ஆலோசித்தது. கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பால், அந்த ஆலோசனையை, பா.ஜ., கைவிட்டது.உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில், உயிர் காக்கும் கருவிகளை பொருத்தியபடி, முதல்வராக, நீடித்து வந்தார். மனோகர் பரீக்கர், நேற்று முன்தினம் காலமானதை அடுத்து, கோவா அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. ‘சட்டசபையில் தனிப்பெரும் கட்சியாக உள்ள எங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்’ என, கவர்னர் மிருதுளா சின்ஹாவை சந்தித்து, காங்., – எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையே, பரீக்கர் மறைவால், ஆட்சி கவிழாமல் தடுக்கும் முயற்சியில், பா.ஜ., தலைவர்கள் ஈடுபட்டனர். கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, மூத்த தலைவரும், மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சருமான, நிதின் கட்கரி ஆகியோர், பா.ஜ., மற்றும், கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்களுடன், பனாஜியில் தீவிர ஆலோசனை நடத்தினர். இரண்டு மணி நேரத்துக்கு மேல் நீடித்த இந்த கூட்டத்தில், கோவா சட்டசபை சபாநாயகரும், பா.ஜ., மூத்த தலைவருமான, பிரமோத் சாவந்த், பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சிகளின் சட்டசபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கூட்டணி கட்சிகளான, மஹாராஷ்டிரவாதி கோமாந்தக் கட்சியின் சுதீன் தவாலிகர், கோவா பார்வர்டு கட்சியை சேர்ந்த விஜய் சர்தேசாய் ஆகியோருக்கு, துணை முதல்வர்பதவி வழங்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, நேற்றிரவு, கோவா முதல்வராக, பா.ஜ., மூத்த தலைவர், மனோகர் பரீக்கரின் இறுதிச் சடங்கு, கோவாவில் நேற்று நடந்தது,கணயை அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட, மனோகர் பரீக்கர், நேற்று முன்தினம் காலமானார். நேற்று காலை, அவரது உடல், பனாஜி நகரில் உள்ள, பா.ஜ., தலைமை அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு, கட்சியினர், பரீக்கர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.இதன்பின், பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக, பனாஜியில் உள்ள கலா அகாடமி கட்டடத்துக்கு, பரீக்கர் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு, பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று, பரீக்கர் உடலுக்கு, கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தனர். பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும், பரீக்கர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் பா.ஜ., மூத்த தலைவர்கள், பரீக்கர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பரீக்கரின் குடும்பத் தினருக்கு, பிரதமர் ஆறுதல் கூறினார்.மாலை, 4:00 மணிக்கு, இறுதி ஊர்வலம் துவங்கியது. இதில், ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். பஞ்சிம் மிராமர் கடற்கரைக்கு, பரீக்கர் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. பின், முழு அரசு மரியாதையுடன், அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.