கோதபாய ராஜபக்சவிற்கு “ஜனாதிபதி” என்னும் மகுடம் சூட்டப்பெற்றால், தமிழ்த் தேசிய அடையாளமே குறிவைக்கப்படும்

கோதபாய ராஜபக்சவிற்கு “ஜனாதிபதி” என்னும் மகுடம் சூட்டப்பெற்றால், தமிழ்த் தேசியம் என்னும் எமது அடையாளமே குறிவைக்கப்படும்…………….
,
சிறையில் வாடும் தமிழ் பேசும் அரசியல் கைதிகளுக்கு சிறைக் கூடமே சுடுகாடாய் மாறும்…….

எமது கனடா உதயன் தனது வாராந்த ஆசிரிய தலையங்கமான “கதிரோட்டம்” என்னும் பத்தியை கடந்த 24 வருடங்களாக ஒரு வாரம் கூட தவறவிடவில்லை. இது வரையிலும் 1226 தலையங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இந்த வாரம் 1227வது கதிரோட்டத்தை வடிப்ப்தற்காக எமது விரல்களும் சிந்தனைகளும் இயங்கிக்கொண்டிருக்கின்றன.
இந்த வாரத்து “கதிரோட்டம்” என்றுமே இல்லாதவாறு இரண்டு தலைப்புக்கள். காரணம், இலங்கையில் எற்படப்பொதும் ஒரு அரசியல் மாற்றத்தினால் பல அழிவுகள் தமிழர் தரப்பிற்கு எற்படப் போகின்றன என்பதற்காக எச்சரிக்;கையாகவே நாம் இந்த இரண்டு தலைப்புக்களை ஒரு தலையங்கத்திற்கு இட்டுள்ளோம்.

கோதபாய என்னும் கொடிய மனிதப் பிறப்பு, இனவாதி,, இலங்கை முழுவதிலும் தமிழ் சிங்கள ஆங்கிர மொழிகளில் மகிந்த அரசினதும் கோதபாய என்னும் “போலி” பாதுகாப்புச் செயலரினதும் அட்டூழியங்களையும் ஊழல்களையும் தங்கள் எழுத்துககளில் வடித்த எண்ணற்ற பத்திரிகையாளர்களை பட்டப் பகலில் கொன்றும் காணமல் ஆக்கியும் செய்த “கொடுங்கோலன்” ஆவார்.

இவரது பதவிக் காலத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அனுபவித்த கொடுமைகள் ஏராளம். இவ்வாறான ஒருவர் இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்றால் என்ன நடக்:கும் என்பதை அவர் நேற்;று முன்தினம் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பகிரங்கமாகத் தெரீவித்த கருத்துக்கள் எக்காளமிடுகின்றன.
“நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட உடனேயே சிறைகளில் வாடும் இராணுவத்தினர் அனைவரையும் விடுதலை செய்வேன்” என்று கோதபாய இராஜபக்ச கர்ச்சித்துள்ளார். இதற்கு அர்த்தம், சிறையில் வாடும் தமிழ் பேசும் சிறைக்கைதிகளை அவர் மறந்துவிட்டார் அல்லது மறந்து பேசுகின்றார் என்பதல்ல. அவர்கள் அனைவரும் தொடர்ச்சியாக சிறைகளில் வதைக்கப்படுவார்கள் என்பதே அவரது அறிவிப்பின் சாராம்சம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்

இது இவ்வாறிருக்க, யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குச் சென்றுள்ள அங்கஜன் இராமநாதன் என்னும் தமிழ்பேசும் பாராளுமன்ற உறுப்பினர் கொழும்பில்
“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுத்துள்ள தீர்மானத்தை சிறுபான்மை தமிழ்,முஸ்லிம் மக்கள் ஏற்றுக்கொண்டு முழுமையான ஆதரவு வழங்குவரென,தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு சு.கவின் ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் கொழும்பு, மருதானை டார்லி வீதியில் அமைந்துள்ள சு.கவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
ஒரு தமிழராக இருந்துகொண்டு கோதபாய என்பவரின் வருகையை வரவேற்றும் வாழ்த்தியும் வார்த்தைகளை கக்குவதற்கு இவருக்கு தோன்றிய எண்ணங்கள் எங்கிருந்து வந்தவை என்பதை நாம் அறிவோம்.
இவவாறான ஒரு ஆபத்தான அரசியல் தளத்தை தோற்றுவிப்பதற்கு தமிழ் மக்கள் எவருமே காரணமாக இருக்கவில்லை. ஆனால் எமது தமிழ்த் தவைர்கள் முக்கிய காரணிகளாக அமைந்துவிட்டார்கள். அதுவும் மாவை சேனாதிராஜா, சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியயோர் ஆடிய “ஆட்டம்” தான் எமது இனத்தை ஆட்டம் காண வைத்துள்ளது என்றால் அதுவும் மி;கையாகாது.

ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிப்பெற்ற பின்னர் சு.கவும் பொதுஜன பெரமுனவும் இணைந்த அரசாங்கமொன்று அமைக்கப்படும். மக்கள் எதிர்பார்க்கும் திட்டங்களை மாத்திரமே நாம் நடைமுறைப்படுத்துவோம். இதேவேளை, சிறுபான்மை தமிழ்,முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தே சு.கவின் தீர்மானம் அமைந்துள்ளது. எனக் கூறும் அங்கஜன் போன்ற தமிழர்கள் இதயத்தை தங்கள் இடது புறத்தில் தாங்கிய வண்ணமா இவ்வாறு பேசுகின்றார்கள் என்பதை நாம் பரிசோதிப்பைத விட்டு எமது இனம் தொடர்நது அல்லல்களுக்கு ஆட்படாமல் இருக்கவும் தமிழ் பேசும் சிறைக்கைதிகள் விடுதலை பெறவும், சரியான தலைமைகளின் கீழ் குரல் கொடுக்க வேண்டும் என்பதை நாம் இவ்வாரம் சுட்டிக்காட்டுகின்றோம்.