கொழும்பு துறைமுக நகர் பணி 2019ல் முழுமை பெறும்

இலங்கையில், சீனா சார்பில், கொழும்பு துறைமுக நகர் அமைக்கும் பணிகள், ௨௦௧௯ல் முடியும்’ என, அந்நாட்டின், நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர், சம்பிகா ரனவகா தெரிவித்தார்.
இலங்கை அதிபராக, ராஜபக் ஷே இருந்த போது, ‘கொழும்பு துறைமுகம் நகர்’ உருவாக்க, சீனாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதிபராக, சிறிசேன பதவியேற்ற பின், முறைகேடு நடந்துள்ளதாக கூறி, திட்டத்தை இலங்கை அரசு நிறுத்தியது.
இத்திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, இலங்கைக்கு, சீனா நெருக்கடி கொடுத்தது. இதையடுத்து, இத்திட்டத்தை நிறைவேற்ற, சிறிசேன அரசு, ௨௦௧௬ல் அனுமதி அளித்தது.
இந்நிலையில், இலங்கை நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர், சம்பிகா ரனவகா கூறியதாவது:
கொழும்பு துறைமுக நகர் திட்டம், ௨௬௯ ஏக்கரில், ௯,௧௦௦ கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட உள்ளது. இதில், ௬௨ ஏக்கர், இலங்கை அரசுக்கு சொந்தமானது. ௧௧௬ ஏக்கர், சீனாவுக்கு குத்தகைக்கு கொடுக்கப்படும். மற்ற பகுதிகள், பொதுமக்கள் பயன்பாட்டுக்கான பகுதிகளாக இருக்கும்.
இத்திட்டம், ௨௦௧௯ல் முடியும். இத்திட்டத்தால், இந்திய பெருங்கடலில், முக்கிய நிதி வர்த்தக மையமாக, கொழும்பு துறைமுக நகர் உருவெடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சீனாவுடன் இணைந்து, இலங்கை செயல்படுத்தும் இத்திட்டத்துக்கு, இந்தியா, ஏற்கனவே கவலை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

COMMENTS

  • siva

    welcome china . we make srilanka great again . india dont like srilanka become another hong kong . china is the best . x jenbing the best peaceful leader the whole world . india dont want the seperate state in srilanka . under one country . srilanka .

Comments are closed.