கொரோனா வைரஸ் பரவ காரணமாக, தப்லிக் – இ – ஜமாத் அமைப்பினரே காரணம் – யோகி ஆதித்யநாத்

உத்தர பிரதேசத்திலும் இதர பகுதி களிலும், கொரோனா வைரஸ் பரவ காரணமாக, தப்லிக் – இ – ஜமாத் அமைப்பினர் விளங்குகின்றனர். ஒரு நோயால் நாம் பாதிக்கப்படுவது குற்றமல்ல; ஆனால், தங்களுக்கு நோய் இருப்பதை மறைப்பது, மிகப்பெரிய குற்றம். இது கண்டனத்திற்குஉரியது. இந்த குற்றத்திற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

– யோகி ஆதித்யநாத் , உத்தர பிரதேச முதல்வர், பா.ஜ.,

ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும்!

கொரோனா வைரசால் நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நம் உறவினர் மற்றும் நண்பர்களை இழந்து தவிக்கிறோம். பொருளாதார சீர்குலைவு, அரசுகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்த இக்கட்டான சூழலில் இருந்து நாம் மீண்டு வர, மக்கள் ஒன்றிணைந்து இந்த சவாலை எதிர்கொள்ள வேண்டும்.

– தலாய் லாமா , திபெத்திய புத்த மதகுரு

தினமும் ஒரு புதிய பொய்!

ராகுல், தினமும் ஒரு புதிய பொய்யை கூறி வருகிறார். மக்களை பாதுகாக்கும் சக்திவாய்ந்த துணையாக, ‘ஆரோக்கிய சேது’ செயலி விளங்குகிறது. தங்கள் வாழ்நாள் முழுதும், பிறரை கண்காணித்து வருவோருக்கு, தொழில்நுட்பத்தை எவ்வாறு நன்மைக்காக பயன்படுத்த வேண்டும் என்பது தெரியாது.

– ரவிசங்கர் பிரசாத் , மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர், பா.ஜ.,