- தமிழகத்துக்கு நன்றி தெரிவித்து செஸ் வீரர்கள் நெகிழ்ச்சியுடன் பிரியாவிடை
- மாஜி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்களாவில் புலனாய்வு அதிகாரிகள் ரெய்டு ஏன் ?
- 5வது நாளாக தொடரும் போர் பயிற்சி : தைவான் ஜலசந்தியில் சீனா அடாவடி
- எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் ராஜபக்சே போல் செயல்படுகிறார் - டிடிவி தினகாரன் பேட்டி
- இந்தியா செய்தி குரங்கு அம்மை தடுப்பு: நிபுணர்கள் ஆய்வு

கொரோனா வைரசின் தாக்கம் அதிகரிப்பு – சிங்கப்பூரில் ஒரே நாளில் 533 பேருக்கு கொரோனா
கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து ஒரே நாளில் 533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. நோய் பரவுதலை கட்டுப்படுத்த பல நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. சிங்கப்பூரிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிங்கப்பூரில் கொரோனா தொற்றின் தாக்கத்தால் நேற்று ஒரே நாளில் 533 பேர்பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 32,876 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் 23 பேர் இதுவரை பலியாகினர். மேலும் 16,444 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். புதிதாக நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 3 பேர் சிங்கப்பூரையும், மற்றவர்கள் பிற நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் எனவும் தெரியவந்துள்ளது.