கொரோனா பாதிப்புகளில் ரஷ்யா 2வது இடம்

கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து உலகளவில் ரஷ்யா இரண்டவது இடத்தை பிடித்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ரஷ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 10,899 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,32,243 ஆக அதிகரித்தது. இவற்றில் 43, 512 பேர் குணமடைந்தனர். கொரோனா நோய் பாதித்து இதுவரை 2,116 பேர் பலியாகினர். ரஷ்யாவில் கொரோனா பாதிப்புகள் தொடர்பாக அதிபர் புதின் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்.

மாஸ்கோவிலும் பலருக்கு கொரோனா பரிசோதனைகள் தினமும் நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து, கடந்த சில நாட்களாக ரஷ்யாவில் பாதிக்கப்படுபவர்களின் நாளொன்றுக்கான சராசரியில் 10 ஆயிரத்தை கடந்தது. கொரோனா ஐரோப்பிய நாடுகளில் கோர தாண்டவம் ஆடி வருகிறது. ஆயினும் அதிகம் பாதிக்கப்பட்டவர்களில் ஸ்பெயின் மற்றும் பிரிட்டனை பின்னுக்கு தள்ளி ரஷ்யா 2 வது இடத்தில் உள்ளது.