கொரோனா நெருக்கடியில் அனைவருக்கும் உதவி செய்த ஹிந்துக்களுக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பாராட்டு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பிரிட்டன் தலைநகர் லண்டனில், பிரார்த்தனை நிகழ்ச்சியை, இந்திய தொழிலதிபர் ஹிந்துஜா சமீபத்தில் நடத்தினார்.பிரிட்டன் இளவரசர் சார்லஸ், ‘ஆன்லைன்’ வாயிலாக விளக்கேற்றி துவக்கி வைத்தார். இதில் ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பங்கேற்ற பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பேசியது:

இங்கு வசிக்கும் ஹிந்துக்கள், சீக்கியர்கள், கொரோனா நெருக்கடியில் சிக்கிய பலரையும் காப்பாற்றும் வகையிலான உதவிகளை, இரக்கம், சமூக உணர்வு மற்றும் உதவும் மனப்பான்மையுடன் மேற்கொண்டனர். இதற்காக அவர்களை பாராட்டுகிறேன்.
தீபாவளி, இருளை வெல்லும் பண்டிகை. இது தீமைக்கு எதிரானது என்பதால், வைரஸ் பாதிப்பை, நாம் ஒன்றாக கடந்து செல்வோம். இவ்வாறு, அவர் பேசினார்.