கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதால் தொடர்ந்து தனிமையில் இருக்கப் போகிறேன் – போரிஸ் ஜான்சன்

‘கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதால் தொடர்ந்து தனிமையில் இருக்கப் போகிறேன்’ என, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கலக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

Boris Johnson #StayHomeSaveLives

@BorisJohnson
Another quick update from me on our campaign against #coronavirus.

You are saving lives by staying at home, so I urge you to stick with it this weekend, even if we do have some fine weather.#StayHomeSaveLives

போரிஸ் ஜான்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று (3ம் தேதி) மாலை வெளியிட்டுள்ள வீடியோவில், ‘கடந்த ஏழு நாட்கள் என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன். ஆனாலும் எனக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் இருக்கின்றன. இன்னும் காய்ச்சல் இருக்கிறது. அதனால் அரசின் அறிவுரைப்படி, நான் தொடர்ந்து தனிமையில் இருக்கப் போகிறேன்’ என, உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். ‘அவர் விரைவில் மீண்டு வர வேண்டும்’ என, பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

பிரிட்டனில், தீவிர சிகிச்சை தேவைப்படும் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்காக, மிகப் பெரிய மருத்துவமனையை அந்நாட்டு அரசு ஒன்பதே நாட்களில் கட்டியுள்ளது. கிழக்கு லண்டனில் உள்ள ‘எக்செல்’ என்ற கண்காட்சி அரங்கத்தை தற்காலிக மருத்துவமனையாக மாற்றியுள்ளனர். அரச படைகள், சுகாதாரத்துறை பணியாளர்களின் உதவியோடு, 4,000 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்ட அந்த மருத்துவமனைக்கு, ‘நைட்டிங்கேல்’ எனப் பெயர் சூட்டியுள்ளனர். இன்று (3ம் தேதி) காலை முதல், அந்த மருத்துவமனை பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

latest tamil news