கொரோனா தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தி.மு.க., – எம்.எல்.ஏ., – ஜெ.அன்பழகன் கவலைக்கிடம்

‘கொரோனா தொற்றால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், தி.மு.க., – எம்.எல்.ஏ., – ஜெ.அன்பழகன், 61, மீண்டும் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தகவல் தெரிவிக்கிறது.

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி, எம்.எல்.ஏ., – ஜெ.அன்பழகன்,61 இவருக்கு, சில நாட்களுக்கு முன் , மூச்சு திணறல் ஏற்பட்டதால், குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்ததில், கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

‘கடந்த, 4ம்தேதி, வென்டிலேட்டர் வாயிலாக, 80 சதவீதம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. பின்னர் ஆக்சிஜன் அளவு குறைக்கப்பட்டதால் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது’ என, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

இந்நிலையில் இன்று மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில், ஜெ.,அன்பழகனுக்கு இன்று காலையிலிருந்து தேவைப்படும் ஆக்ஸிஜன் அளவு அதிகரித்துள்ளது. தற்போது அவரது இதயம், சிறுநீரகத்தின் செயல்பாடுகள் மோசமடைந்துள்ளன. ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதற்கு மருந்துகள் அளிக்கப்பட்டு வருகிறது. எனினும்அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளது. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.