கொரோனாவைக் கண்டு பயப்படாதீர்கள்… தைரியமாக இருங்கள் – அமெரிக்க அதிபர் டிரம்ப்

அமெரிக்காவில் வரும் நவ., 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனா தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் தேர்தல் தள்ளிப்போக வாய்ப்பு இருக்கிறதா என்கிற ரீதியில் எதிர்க்கட்சிகள் விவாதித்தன.

மருத்துவமனை பால்கனிக்கு வந்த டிரம்ப், தனக்கு கொரோனா ஏற்பட்டதும் 72 மணிநேரம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறினார். மேலும், ‘கொரோனாவைக் கண்டு பயப்படாதீர்கள். அனைவரும் தைரியமாக இருங்கள்’ என்றார். கொரோனாவுக்கு இடையிலும் டிரம்ப் தனது பிரச்சாரத்தை கைவிடாதது எதிர்க்கட்சிகளை வியக்க வைத்துள்ளது.

‘கொரோனா காலத்தில் அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபடுவது ஆபத்து என எனக்கு தெரியும். ஆனால் மக்களுக்கு சேவை ஆற்றுவது என்னுடைய கடமை. அதனால் என்னுடைய வேலையை துவங்கிவிட்டேன். ஒருவேளை எனக்கு எதிர்ப்புசக்தி அதிகமாக உள்ளதா என்று தெரியவில்லை. ஆனால் நான் மன தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் இருக்கிறேன்’ என, வீராவேசமாக டிரம்ப் தனது உரையை துவங்கியுள்ளார்.

latest tamil news

டிரம்ப் இவ்வளவு ஆரோக்கியமாக இருப்பதற்கு முக்கிய காரணம் அவருக்கு அளிக்கப்பட்ட விசேஷ சிகிச்சை என்பதையும் மறுக்க முடியாது. டிரம்புக்கு சிகிச்சை அளிப்பதற்காக பிரத்தியேகமாக ‘ரிஜெனரல் எக்பெரிமெண்டல் ஆன்டிபாடி தெரபி’ என்ற பிரத்தியேக தெரபி முறை அவர் உடலில் பயன்படுத்தப்பட்டது. இந்தமுறை இதற்கு முன்னர் 275 நோயாளிகளிடம் பரிசோதனை செய்யப்பட்டு வெற்றி அடைந்தது. இந்த தெரபி எடுத்துக் கொள்வது சாமானியர்களுக்கு சாத்தியப்படாத ஒன்று. இந்த தெரபியை அமெரிக்க உணவு மற்றும் மருந்து அமைப்பு இதுவரை அங்கீகரிக்கவில்லை. அங்கீகரிக்கப்படாத சிகிச்சையை அமெரிக்க குடிமக்கள் பெற இயலாது. ஆனால் டிரம்புக்கு மட்டும் பிரத்யேகமாக இந்த சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.