கொரோனாவுக்கு மலேரியா தடுப்பு மருந்து !!

கொரோனாவுக்கு தடுப்பு மருந்தாக மலேரியா நோய் தடுப்பு மருந்தை பயன்படுத்தி கொள்ள அமெரிக்கா அனுமதி அளித்து உள்ளது.

இது குறித்து அமெரிக்க அதிபர் தெரிவித்து இருப்பதாவது: உலகம் முழுவதும் அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரசால் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதனையடுத்துஅமெரிக்கா உட்பட உலகின் பல்வேறு நாடுகளும் இந்த நோயை தடுப்பதற்கான மருந்தை கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டின.

இந்நிலையில் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு மலேரியா நோய் தடுப்பிற்கான மருந்தை, கொரோனா நோய்க்கான தடுப்பு மருந்தாக, பயன்படுத்தி கொள்ளலாம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.