- உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு
- எல்லையில் சீன வீரர்களை அடித்து விரட்டிய இந்திய ராணுவம் !!
- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி

கொரோனாவுக்கு பயந்து தப்ப முயன்ற இலங்கை மஹர சிறை கைதிகள் மீது துப்பாக்கி சூடு !!
கொழும்பு, கம்பஹா – மஹர சிறைச்சாலையில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
கொரோனா தொற்றுக்கு பயந்து சிறையிலிருந்து கைதிகள் சிலர் தப்ப முயன்றதால் இது நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கி பிரயோகம் இன்று, ஞாயிற்றுக்கிழமை, மாலை நடத்தப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி போலீஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
துப்பாக்கி பிரயோகத்தில் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
காயமடைந்துள்ள கைதிகள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனனர்.
மஹர சிறைச்சாலைக்குள் இன்று மாலை திடீரென அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
அமைதியின்மையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக போலீஸ் விசேட அதிரடி படையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், சிறைச்சாலை அதிகாரிகளின் ஒத்துழைப்பிற்காக களனி பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் மற்றும் ராகம போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரின் தலைமையில் ஐந்து போலீஸ் குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.
அதேபோன்று, சிறைச்சாலையை சூழவுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.
மஹர சிறைச்சாலையில் இன்று மாலை ஏற்பட்ட அமைதியின்மை அடுத்து, சிறைச்சாலைக்குள் தீ பரவியுள்ளது. தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக தீயணைப்பு படையின் வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.