
கொரோனாவால் மனநல நோயாளிகள் அவதி – உலக சுகாதார அமைப்பு
‘கொரோனா தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் கடும் நெருக்கடி உண்டாகி உள்ளது’ என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளதாவது:உலக நாடுகளில் மனநலம் பாதிக்கப்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் நீண்டநாள் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகம்.தற்போது கொரோனா தாக்கம் காரணமாக மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் கடும் நெருக்கடி உண்டாகி உள்ளது. இதனால் அவர்களது உடல் ஆரோக்கியம் மற்றும் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட முக்கியமான துறைகளில் இதுவும் ஒன்று.

கடந்த ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை உலக சுகாதார நிறுவனம் 130 நாடுகளை நாடுகளில் கணக்கெடுப்பு மேற்கொண்டது. 35 சதவீத நாடுகளில் நீண்டநாள் மனநோய் பாதிப்புகொண்ட நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது ஆய்வில் தெரிய வந்தது.
குறிப்பாக, 193 நாடுகளில் 93 சதவீத நாடுகளில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது சிகிச்சை வசதி இன்றி கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
மருத்துவமனைகள் முழுவதும் நோயாளிகள் நிரம்பி வழிவதால் மனநல நோய் பாதிப்பு உடையவர்களுக்கு படுக்கை வசதிகூட இல்லாமல் பின்தங்கிய நாடுகள் பல சிரமத்திற்கு உள்ளாகி உள்ளன.இவ்வாறு உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.