கைஸ் முகமது – போலி பேஸ்புக் ஐடி: பெண்களை ஆபாசமாக சித்தரித்தவர் கைது

காஞ்சிபுரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், போலி பேஸ்புக் கணக்கு மூலம் பெண்களின் ஆபாச படங்களை பகிர்ந்து போலீசிடம் சிக்கியுள்ளார். விசாரணையில் அவர் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் கைஸ் முகமது (வயது 27). எம்.ஏ. படித்தவர். சென்னை தனியார் மருத்துவமனையில் திட்ட அலுவலராக வேலை பார்த்தார். பேஸ்புக்கில் வெவ்வேறு பெயர்களில் கணக்கு துவங்கி, பெண்களின் ஆபாச படங்களை பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். பாதிக்கப்பட்ட ஒரு இளம்பெண் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். போலீசார், கைஸ் முகமதுவின் பேஸ்புக் செயல்பாடுகளை கண்காணித்தனர். பெண்களின் புகைப்படங்களை தனது செல்போனில் இருந்து முகமது அப்லோடு செய்வதை சென்னை அம்பத்தூர் போலீசார் கண்டுபிடித்து உடனடியாக கைது செய்தனர்.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கைஸ் முகமது (வயது 27) என்பவர், தனியார் மருத்துவமனையில் திட்ட அலுவலராக வேலை பார்த்துவந்தார். அவர் மீது ஆபாச படம் பகிர்ந்ததாக பெண் ஒருவர் புகார் அளித்தார்.
அது குறித்து முகமதுவை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையின் வெளியான விவரங்கள்: முகமது, உடன் படித்த பெண்ணை காதலித்து அவருடன் ‘ஓகே கண்மணி’ படத்தை போல திருமணம் செய்யாமலேயே ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்போது காதலியின் தோழியுடன் பழக்கம் ஏற்பட்டது. அவருக்கு தெரியாமல் அவருடைய புகைப்படத்தை எடுத்துள்ளார். காதலியின் ஆபாச படங்களையும் எடுத்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் அனைத்தையும் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியாமல் போலி பேஸ்புக் கணக்கு மூலம் பதிவேற்றியுள்ளார். அத்துடன் சேர்த்து, மருத்துவமனையில் பணிபுரியும் பெண்களையும் ஆபாசமாக படமெடுத்து பதிவிட்டுள்ளார். அதற்கு சிலர் பதிவிடும் கமெண்டுகளை சைகோ போல ரசித்துள்ளார்.

இந்த விவகாரம் தெரிந்த பெண் ஒருவர், புகார் கொடுக்க வேறொரு பெண்ணின் உதவியுடன் போலீஸ் உயரதிகாரியை சந்தித்து புகார் அளித்துள்ளனர். தகவல் தெரிந்த முகமது, உதவிய பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து முகமதுவை கைது செய்த போலீசார், அவரின் மொபைல் போனை ஆய்வு செய்தனர். அதில், ஏராளமான பெண்களின் ஆபாச படங்கள் இருப்பதை கண்டறிந்த போலீசார், அதில் அவரது குடும்ப பெண்களின் படங்களும் இருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். அவரை கைது செய்த போலீசார் 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

போலியான தகவல்களை கொண்டு பேஸ்புக் கணக்கை துவக்கிய முகமது, அதை தன் மொபைல் போனிலேயே இயக்கி வந்துள்ளார். இதனால், பேஸ்புக் கணக்கை ஆய்வு செய்த போலீசார், அது பதிவாகியுள்ள மொபைலை எளிதாக கண்டறிந்து, முகமதுவை பிடித்துள்ளனர். பின், அந்த பேஸ்புக் கணக்கை போலீசார் லாக் செய்தனர்.