- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

கைவசம் இன்னும் துரும்புகளை தேவைப்படும் போது யுஎன்பி க்கு எதிராகப் பயன்படுத்துவேன் என எச்சரிக்கின்றார் ஜனாதிபதி
கைவசம் இன்னும் துரும்புகளை தேவைப்படும் போது யுஎன்பி க்கு எதிராகப் பயன்படுத்துவேன் என எச்சரித்துள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, நான் ஒரு துரும்பை மாத்திரமே பயன்படுத்தியுள்ளேன். இன்னும் துரும்புகள் என்னிடம் இருக்கின்றன. தேவைப்பட்டால் அதனை பயன்படுத்தலாம் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
எங்களிடம் தேவையான பெரும்பான்மை இருக்கின்றது. இதனால் எனது தீர்மானங்களை நான் எக்காரணத்திற்காகவும் இடையில் நிறுத்தப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக்குழு கூட்டத்திலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். 14ஆம் திகதி பாராளுமன்றம் கூடும் போது அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பை வழங்குமாறு ஐக்கிய தேசிய கட்சியினரை கேட்டுக்கொள்வதாகவும் இல்லையென்றால் அரசியலமைப்பிற்கு ஏற்றவாறு செய்யக் கூடிய துரும்புகள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் அவர் தனது உரையில் ரணில் விக்கிரமசிங்க இன்னும்; சில வருடங்கள் நாட்டின் பிரதமராக இருந்தால் நாட்டையும் நாகமாக்கி ஐக்கிய தேசியக் கட்சியை சீரழித்து விடுவார் என்று எச்சரித்துள்ளார்.