கேரம் போர்டிற்காக முத்தலாக்: கணவர் மீது வழக்கு

ராஜஸ்தானில் கேரம் போர்டை எடுத்துச் செல்லாத மனைவிக்கு முத்தலாக் கூறி விவாகரத்து செய்த கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ராஜஸ்தானின் பாரன் மாவட்டத்தில் உள்ள அன்டா பகுதியை சேர்ந்தவர் ஷப்ரூநிஷா (24). கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த இவர், மகனுடன் பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் ஷப்ரூநிஷா, சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கு வந்த அவரது கணவர் ஷாகில் அகமது வழிமறித்துள்ளார். தங்கள் மகனுக்காக கேரம் போர்டை எடுத்துச் செல்லும்படி கூறி உள்ளார். அதற்கு மறுத்த ஷப்ரூநிஷாவை, ஷாகில் அகமது அடித்து துன்புறுத்தியதுடன், அந்த இடத்திலேயே முத்தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார்.

இது தொடர்பாக அக்.,1 அன்று மாலை கணவர் மீது ஷப்ரூநிஷா போலீசில் புகார் அளித்துள்ளார். இஸ்லாமிய பெண்கள் பாதுகாப்பு திருமண உரிமை சட்டத்தின் கீழ் ஷாகில் அகமது மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை கைது செய்யப்படவில்லை. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முத்தலாக் சட்டம் நிறைவேற்ற பிறகு கோடா பகுதியில் பதிவு செய்யப்படும் 5வது முத்தலாக் வழக்கு இது