கெஜ்ரிவாலை வைத்து கட்சி தொடங்குவதா? கமல்ஹாசனுக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி

நடிகர் கமல்ஹாசன் கட்சி தொடங்கியிருப்பதற்கு வாழ்த்துகள். இடதுசாரிகள் திராவிடத்தை ஏற்றுக்கொண்டனரா? கொச்சையான முறையில் திராவிடத்தை பரிமாறி இருப்பது நமக்கெல்லாம் அவமானம். தமிழர்கள் மற்றும் அவர்களின் தன்மானத்தை எல்லாம் இந்த நேரத்தில் அடுத்த மாநில முதல்வர்கள் சொல்லி தருகிறார்கள்.

கெஜ்ரிவாலுக்கும், தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம். தமிழ் பற்றியும், தமிழகம் பற்றியும் ஒன்றுமே தெரியாத கெஜ்ரிவாலை வைத்து கமல்ஹாசன் கட்சி தொடங்கியிருப்பது தமிழகத்திற்கு அவமானம். கமல்ஹாசனை பற்றி ஒருவர் காகிதப்பூ மணக்காது என்று சொல்லியிருக்கிறார். அதற்கு அவர், தன்னை விதை என்று கூறியுள்ளார். அப்படியென்றால் கமல்ஹாசனை காகித விதை என்று சொல்லலாமா? என்னை பொறுத்தவரை கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தின் வளர்ச்சி என்று பார்த்தால் ஏமாற்றம்தான்.