- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

கெஜ்ரிவாலுக்கு அடுத்தடுத்த பின்னடைவு
புதுடில்லி: சமீபத்தில் பார்லி.,க்கு 21 செயலாளர்களை நியமித்து டில்லி அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை இன்று விசாரித்த டில்லி ஐகோர்ட், 21 செயலாளர்களின் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. டில்லியில் துணைநிலை ஆளுனருக்கு இருக்கும் அதிகாரத்தை எதிர்த்து டில்லி அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், துணைநிலை ஆளுனருக்கே கூடுதல் அதிகாரம் என தீர்ப்பு கூறப்பட்டது. இந்த சறுக்கலில் இருந்து டில்லி அரசு மீண்டு வருவதற்குள், ஆளும் ஆம்ஆத்மி கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் பலரும் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கினர்.
இதனால் பல விதங்களிலும் டில்லியில் ஆளும் ஆம்ஆத்மி கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இவற்றுடன் இன்று காலை குஜராத் செல்வதற்காக டில்லி ரயில் நிலையத்திற்கு வந்த அவரை எதிர்த்து பா.ஜ., மகளிர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பூ, வளையல் போன்றவற்றை கெஜ்ரிவாலுக்கு பரிசளிக்கவும் முயன்ற அவர்கள், கெஜ்ரிவாலுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். டில்லியில் மட்டுமின்றி குஜராத்திலும் கெஜ்ரிவாலின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்பட்டது.