குழந்தை பெற்ற 26 நாட்களில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த கர்ப்பிணி

வங்காளதேசத்தின் ஜெஸ்சூர் நகரில் சர்சா பகுதியில் ஷியாம்லாகாச்சி கிராமத்தில் வசித்து வருபவர் ஆரிபா சுல்தானா இதி.  கடந்த பிப்ரவரி 25ந்தேதி இவருக்கு குல்னா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குறைமாத நிலையில் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.
இதன்பின் கடந்த 22ந்தேதி அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது.  இதனை அடுத்து உடனடியாக ஆத் தின் என்ற மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.  அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை வழியே பெண் மற்றும் ஆண் என இரட்டை குழந்தைகள் பிறந்தன.
இதுபற்றி மருத்துவமனையின் தலைமை மருத்துவரான ஷீலா பொடார் கூறும்பொழுது, இதிக்கு இரு கருப்பைகள் உள்ளன.  இதில் முதல் குழந்தை ஒரு கருப்பை வழியே பிறந்துள்ளது.  மற்றொரு கருப்பை வழியே இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன என கூறியுள்ளார்.
இது மிக அரிய சம்பவம்.  இதற்கு முன்பு இதுபோன்ற சம்பவத்தினை நான் கேட்டது கூட இல்லை.  முதன்முறையாக இதுபோன்ற சம்பவத்தினை நான் கேள்விப்பட்டு உள்ளேன் என கூறியுள்ளார்.  மருத்துவ வரலாற்றில் மிக அரிய ஒன்றாக இது போன்று நடைபெறுவது உண்டு என கூறப்படுகிறது.