குன்னூரை சேர்ந்த மாணவி கனடாவில் அடையாளம் தெரியாத நபரால் தாக்குதல்

நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த மாணவி ரேச்சல் ஆல்பர்ட். இவர் கனடா நாட்டில் டொரண்டோவில் உள்ள கல்லூரியில் பயின்று வருகிறார்.இந்நிலையில் அங்கு நேரப்படி காலை 8 மணி அளவில் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தபோது , அடையாளம் தெரியாத நபர் கழுத்தில் வெட்டிச் சென்றார்.அருகில் இருந்தவர்கள் மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இது தொடர்பாக குன்னூரில் உள்ள இவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் உடனடி விசா கிடைக்காததால் மிகவும் அப்செட் ஆகி உள்ளனர்.

இதனிடையே ரோச்சலின் தந்தை செய்தியாளர்களிடம் கூறுகையில், அவர் ஆபத்தான நிலையில் உள்ளார். விசாவிற்கான ஆன்லைன் படிவங்களை நாங்கள் பூர்த்தி செய்துள்ளோம். எங்களுக்கு அவசர அடிப்படையில் விசா வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. என கூறினார்.

ரோச்சலின் சகோதரி ரெபேக்கா கூறுகையில், இப்போதைக்கு அவர் முக்கிய மான பராமரிப்பு பிரிவில் இருக்கிறார். இருப்பினும் அவரது நிலைமை மோசமாக உள்ளது. என்ன நடந்தது என்பது குறித்து அறிய எங்களுக்கு சில மணி நேரம் பிடித்தது.சம்பவம் நடந்தது குறித்து எங்களுக்கு 3 மணி நேரம் கழிந்த பின்னர் குறிப்பிட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை அறிந்தோம் என்றார்.

மேலும் வெளியுறவு துறை அமைச்சருடன் பேசியதை உறுதிப்படுத்திய ரெபேக்கா “அவர் எங்களுக்கு உதவி செய்வதாக என்னிடம் கூறினார். எங்கள் விண்ணப்ப எண் தேவை, அப்போது தான் எங்களுக்கு விசாக்களை வழங்க முடியும் என்றார். இப்போது, ​​விண்ணப்ப எண்ணைப் பெறுவதில் சிக்கல் உள்ளது” என்றார்.

இதனிடையே மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்டுவிட்டரில் பதிவட்டிருப்பதாவது:ரேச்சல் ஆல்பர்ட் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். அவர்களது குடும்ப விசாவிற்கு உதவுமாறு நான் வெளியுறவு துறை அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்கிறேன். குடும்ப உறுப்பினர்கள் உடனடியாக எங்களை +91 9873983884 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.