குடும்பங்களில் இடம்பெறும் கணவன்-மனைவி சச்சரவுகள் வளர்ந்து பாரதூரமான விளைவுகளை ஏன் ஏற்படுத்துகின்றன

Scarborough-Rouge Park’s MP Gary Anandasnagaree hosted an event yesterday in Scarborough to discuss on Domestic and Gender-Based Violence in the Tamil Community. Invited Media and Guests from Toronto Police, Legal Sector, Community Leaders were gathered there.
The Discussion took place at TAIBU Community Health Centre at 27 Tapscott Road, Scarborough.
Among the panel Speakers, there were two Tamil Speaking,and they are Prof. Chandrakanthan and Dr. Satha Vivekananthan. Toronto Police Detective Sherina was speaking on the recent incident, took place Scarborough.

தனது தொகுதிக்குள் வாழும் தமிழ் பேசும் குடும்பங்களில் இடம்பெறும் கணவன்-மனைவி சச்சரவுகள் வளர்ந்து பாரதூரமான விளைவுகளை ஏன் ஏற்படுத்துகின்றன என்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடும் முகமா Scarborough-Rouge Park தொகுதிககான பாராளுமன்ற உறுப்பினர் திரு Gary Anandasnagaree நேற்று வியாழக்கிழமை மாலை ஸ;காபுறோ நகரில் ஒரு கலந்துரையாடலை நடத்தினார்.

அண்மையில் ஸ்காபுறொவில் தமிழ்பேசும் கணவன் ஒருவரால் தாக்கபபட்ட ஒரு பெண்மணி மரணத்தை தழுவியதும், இந்த கொலையின விளைவால் அவர்களது மூன்று பிள்ளைகள் ஆதரவற்றவர்களாக ஆக்கப்பட்டதும் தொடர்பாகவும் அங்கு உரையாடபபட்டது.

டாக்டர் சதா விவேகானந்தன் தனது உரையில் எமது தமிழ்க் குடும்பஙகளில் கணவன்- மனைவி இருவருக்கும் இடையில் உருவாகும் பிரச்சனைகளுக்கு பல காரணங்கள் உண்டு என்றும், அவற்றுள் போதை, வறுமை, பணத் தேவை போன்றவை அவர்கள் தங்கள் மறந்து போகும் சந்தர்ப்பங்களை தோற்றுவிக்கின்றது என்று குறிப்பிட்டார்

பேராசிரியர் ஜோசப் சந்திரகாந்தன் தனது உரையில் ஆண்களை விட பெண்களே இந்த குடும்ப உள் முரணபாடுகளின் விளைவாக பாதிக்கபபடுகின்றார்கள் என்றும், அவர்களில் பலர் நாளடைவில் மனநோயாளர்களாக மாறி மிகவும் பாதிக்கப்படுகின்றார்கள் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் இந்த புலம் பெயர்ந்த நாட்டில் வாழ வந்த நாங்கள் எமது சொந்த நாடு அங்குள்ள வாழ்க்கை முறைகளைப் பற்றியே சொல்லிக் கொணடு வாழாமல் கனடாவில் உள்ள வாழ்வியல் முறைகளோடு ஒன்றிப் போகும் சிந்தனை எமது மனங்களில் தோற்றம் பெறவேண்டும் என்றும் குறிபபிட்டார். பெண்கள் அடங்கியிருக்க வேண்டும், வாய் காட்டக் கூடாது என்று கட்டுப்பாடுகளைபெயல்லாம் உடைத்தெறிந்து கணவன்- மனைவி இருவருமே ஒத்துவாழும் போக்கை கடைப்பிடித்து பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே தவிர்க்கும் வகையில் செயற்பட பழகிக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.