குடியரசு துணைத்தலைவர் தேர்தல்: முதல்வர், ஓபிஎஸ்ஸிடம் ஆதரவு கோரினார் மோடி

இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற் கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. இந்நிலையில், குடியரசு துணைத் தலைவருக் கான வேட்பாளரை பாஜக நேற்று முன்தினம் மாலை அறிவித்தது. மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, தமிழக முதல்வர் கே.பழனிசாமியை தொடர்பு கொண்ட பிரதமர் மோடி துணை குடியரசுத்தலைவர் வேட்பாள ருக்கு ஆதரவு கோரினார்.

இது தொடர்பாக நேற்று அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், ‘‘பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் தேர்தலில் ஆதரித்ததற்காக முதல்வர் பழனிசாமிக்கு நன்றி தெரி வித்தார். துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வெங்கய்ய நாயுடுவுக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக் கொண்டார். இதையடுத்து, துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வெங்கய்ய நாயுடுவுக்கு முதல்வர் கே.பழனிசாமி வாழ்த்துகளை தெரிவித்தார்’’ என தெரிவிக்கப்பட் டுள்ளது.

ஓபிஎஸ்ஸிடம்…

இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, அவரிடமும் வெங்கய்ய நாயுடுவுக்கு ஆதரவு கோரினார். இது தொடர்பாக அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சி வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

பிரதமர் நரேந்திர மோடி, ஓ.பன்னீர்செல்வத்திடம் வெங் கய்ய நாயுடுவுக்கு ஆதரவு தரும்படி கேட்டுக் கொண்டார். அவருக்கு அதிமுக (புரட்சித் தலைவி அம்மா) ஆதரவு அளிக் கும் என, பன்னீர்செல்வம் தெரிவித் தார்’’ என கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, தம்பிதுரை தலைமையில் அதிமுக அம்மா அணி எம்பி.க்களும் வா.மைத்ரேயன் தலைமையில் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி எம்பி.க்களும் நேற்று வெங்கய்ய நாயுடுவை தனித்தனியே சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.