- உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு
- எல்லையில் சீன வீரர்களை அடித்து விரட்டிய இந்திய ராணுவம் !!
- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி

குஜராத் முதல்வராக விஜய் ரூபானி மீண்டும் தேர்வு
ஆமதாபாத்தில் நடந்த பா.ஜ., எம்எல்ஏக்கள் கூட்டத்தில், குஜராத் முதல்வராக விஜய் ரூபானி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். நிதின் படேல் துணை முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
குஜராத் சட்டசபைக்கு நடந்த தேர்தலில் ஓட்டு எண்ணிக்கை கடந்த 18-ம் தேதி நடந்தது. இதில் பா.ஜ. பெருபான்மை தொகுதிகளை கைபற்றி மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. இந்நிலையில் புதிய முதல்வரை தேர்வு செய்யும் நடவடிக்கையில் பா.ஜ. மேலிடம் இறங்கியது. இதற்கான ஆலோசனை கூட்டம் ஆமதாபாத்தில் நடந்தது. கட்சியின் மேலிட பார்வையாளரான அருண் ஜெட்லி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் முதல்வராக விஜய் ரூபானியும், துணை முதல்வராக நிதின் படேலும் மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர். இதனை, கூட்டத்திற்கு பின் அருண் ஜெட்லி நிருபர்களிடம் கூறினார்.
வரும் 25ம் தேதி இவர்கள் பதவியேற்று கொள்வார்கள் என தெரிகிறது. குஜராத் முதல்வர் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து கட்சி அலுவலகம் முன்பு ஏராளமான தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.