- கிரண் மோரேவுக்கு கொரோனா: மும்பை இந்தியன்ஸ் அணிக்குச் சோதனை
- இலங்கையில் தடுப்பூசி போட்டவர்களில் 6 பேருக்கு ரத்த உறைவு - 3 பேர் உயிரிழப்பு
- பொது செய்தி தமிழ்நாடு 'நீட்' பயிற்சியை மீண்டும் 25 ல் துவங்க உத்தரவு
- ஸ்ரீ ராம நவமி - ஏப்ரல் 21
- பொது மக்களுக்கு உதவும் பணியில், ஆர்எஸ்எஸ், விஎச்பி உள்ளிட்ட இந்து அமைப்புகள் ஈடுபட்டு உள்ளன

கீழ் கோர்ட்டுகளில் தமிழில் மட்டுமே தீர்ப்பு வழங்கும் உத்தரவுக்கு இடைக்கால தடை
தமிழகத்தில் கீழ் கோர்ட்டுகளில் ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளில் தீர்ப்புகளை எழுதலாம் என சென்னை ஐகோர்ட்டு கடந்த 1994-ம் ஆண்டு அறிவிக்கை வெளியிட்டது. அந்த அறிவிக்கைக்கு எதிராக, கடந்த 2014-ம் ஆண்டு சோலை சுப்பிரமணியன் என்பவர், ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். ஆனால், அம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த உத்தரவை மறுசீராய்வு செய்யக்கோரி, மூத்த வக்கீல் ரத்தினம் என்பவர் மதுரை கிளையில் 2015-ம் ஆண்டு மனு செய்தார். அதை விசாரித்த நீதிபதிகள், தமிழில் மட்டுமே தீர்ப்பு வழங்கலாம் என உத்தரவு பிறப்பித்தனர்.
சுப்ரீம் கோர்ட்டில் மனு
இந்நிலையில், தமிழில் மட்டுமே தீர்ப்பு வழங்கலாம் என்ற உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் வசந்தகுமார் என்பவர் மனு தாக்கல் செய்தார். தமிழில் மட்டுமே தீர்ப்பு அளிக்கப்பட்டால், வெளிமாநிலத்தவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், ஆங்கிலத்திலும் தீர்ப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
அம்மனு, தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ், சந்திர சூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
இடைக்கால தடை
கீழ் கோர்ட்டுகளில் தமிழில் மட்டுமே தீர்ப்பு அளிக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர்.
மேலும், 1994-ம் ஆண்டு வெளியிடப்பட்டது போல், கீழ் கோர்ட்டுகளில் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் தீர்ப்பு வழங்கலாம் என்று உத்தரவிட்டனர். வழக்கு தொடர்பான விரிவான விசாரணை பின்னர் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தனர்.