காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் – வீரரகள் வீர மரணம்

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன், பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் சிஆர்பிஎப் வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீர மரணமடைந்த வீரர்களின் எண்ணிக்கை 40ஆக அதிகரித்துள்ளது. இச்சம்பவத்திற்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், அருண் ஜெட்லி, காங்., தலைவர் ராகுல் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் குறித்து, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் பிரதமர் மோடி தொலைபேசியின் அவசர ஆலோசனை நடத்தினார்.

தாக்குதல் சம்பவம் தொடர்பாக உளவுத்துறை இயக்குனர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், ராணுவ உயரதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.

பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய புல்வாமா பகுதிக்கு என்.ஐ.ஏ குழு நாளை(பிப்.,15) செல்கிறது. ஐ.ஜி அந்தஸ்து கொண்ட அதிகாரி தலைமையில் 12 பேர் கொண்ட குழு விசாரணை நடத்த உள்ளது.