காஷ்மீரில் ராணுவ வீரரை பயங்கரவாதிகள் கடத்திச்சென்றனர்

காஷ்மீரில் ராணுவ வீரரை பயங்கரவாதிகள் கடத்திச்சென்றனர். காஷ்மீரின் புட்காம் மாவட்டம் குவாஸிப்போரா பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் முகம்மது யாசின், விடுமுறையை கழிக்க தனது சொந்த ஊருக்கு வந்தார்.

இன்று இரவு அவரை பயங்கரவாதிகள் சிலர் வீடு புகுந்து துப்பாக்கிமுனையில் அடர்ந்த காட்டுப்பகுதிக்கு கடத்திச் சென்றனர். தகவலறிந்த உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.