காவிரி வாரியம் அமைத்தால் கர்நாடகாவில் போராட்டம் வெடிக்கும் : வட்டாள் நாகராஜ்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. காவிரி வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக எம்.பி.,க்களின் தொடர் போராட்டம் காரணமாக பார்லி., 18 வது நாளாக இன்றும் முடங்கி உள்ளது.

இந்நிலையில் காவிரி விவகாரம் குறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய கன்னட கூட்டமைப்புக்களின் தலைவர் வட்டாள் நாகராஜ், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் கர்நாடகாவில் போராட்டம் வெடிக்கும். காவிரி விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் அரசியல் செய்கின்றன. அதற்கு எதிராக ஏப்ரல் 5 ல் கர்நாடகாவில் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்துள்ளார்.