காவிரி பிரச்சினை: ஓபிஎஸ் தலைமையில் அமைச்சரவை ஆலோசனை

நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த அமைச்சர வைக் கூட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகள் நியமித்தல்,உணவு பாதுகாப்புச் சட்டம்,காவிரி வழக்கு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டன.

முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 22-ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதை யடுத்து,முதல்வர் ஜெயலலிதாவின் துறைகள் அனைத்தும் நிதியமைச் சர் ஓ.பன்னீர் செல்வத்திடம் வழங்கப்பட்டன. முதல்வர் கவ னித்து வந்த உள்துறை,பொது மற்றும் ஐஏஎஸ்,ஐபிஎஸ் அதிகாரி கள் விவகாரங்கள் உள்ளிட்ட துறை களை ஓ.பன்னீர்செல்வம் கவனிப் பார் என ஆளுநர் வித்யாசாகர் ராவ் கடந்த 12-ம் தேதி அறிவித்தார். மேலும்,அமைச்சரவை கூட்டங் களுக்கு அவரே தலைமை வகிப்பார் என்றும்,முதல்வராக ஜெயலலிதாவே நீடிப்பார் என்றும் ஆளுநர் அறிவித்தார்.

இந்நிலையில்,நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம்,நேற்று காலை 9.30 மணிக்கு தலை மைச் செயலகத்தில் நடந்தது. இதில் திண்டுக்கல் சீனிவாசன்,எடப்பாடி பழனிசாமி,செல்லூர் கே ராஜூ,தங்கமணி,வேலுமணி,ஜெயகுமார் உட்பட 32 அமைச்சர் கள்,தலைமைச் செயலர் பி.ராம மோகன ராவ்,நிதித்துறை செயலர் சண்முகம் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டம் 10.30 மணிக்கு நிறைவடைந்தது.

நிதி ஒதுக்கீடு

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அதிகாரிகள் நியமனம்,காவிரி நீர் விவகாரத்தில் தமிழக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள்,உணவுப் பாதுகாப்பு சட்டத்தை செயல்படுத்துதல்,உலக முதலீட் டாளர் மாநாடு மூலம் முதலீடு செய்தவர்களுக்கான நிலம் ஒதுக் கீடு,தமிழக அரசு திட்டங்களுக்கான நிதி ஒதுக்குதல் உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.