கால்பந்து ‘ஜாம்பவான்’ மாரடோனாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது !!

மாரடோனா உடல் அடக்கம் செய்யப்பட்டது. கால்பந்து ‘ஜாம்பவான்’ மாரடோனா 60. நான்கு உலக கோப்பை தொடரில் பங்கேற்ற இவரது தலைமையிலான அர்ஜென்டினா அணி 1986ல் உலக கோப்பை வென்றது. 2008 முதல் 2010 வரை அர்ஜென்டினா அணி பயிற்சியாளராக செயல்பட்டார்.கடந்த அக்டோபர் மாதம் கொரோனா சோதனையில் தேறினார். இருப்பினும் மது சார்ந்த தொல்லைகளுக்கு சிகிச்சை எடுத்து வந்தார். கடந்த நவ. 3ம் தேதி பியுனஸ் ஏர்சின், லா பிளாட்டா பகுதியில் உள்ள மருத்துமனையில் மாராடோனா மூளையில் ஆப்பரேஷன் செய்யப்பட்டது.

உறைந்திருந்த ரத்தத்தை வெற்றிகரமாக அகற்றிய பின், நவ. 11ல் வீடு திரும்பினார். திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இவரது உடல் காசா ரொசாடாவில் உள்ள அர்ஜென்டினா அதிபர் மாளிகைக்கு கொண்டு செல்லப்பட்டது. இங்கு மாரடோனா வென்ற உலக கோப்பை மாதிரி வைக்கப்பட்டு இருந்தது.

இங்கு ரசிகர்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. இறுதிச்சடங்குகளுக்குப் பின், அர்ஜென்டினா தேசியக் கொடி போர்த்திய மாரடோனா உடல், ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. பியுனஸ் ஏர்ஸ் சாலையில் இருபக்கங்களில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வழியனுப்பினர். புறநகர் பகுதியில் பெல்லா விஸ்டா கல்லறையில், அவரது பெற்றோர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், மாரடோனா உடல் அடக்கம் செய்யப்பட்டது. மாரடோனா முதல் மனைவி கிளாடியா, மகள்கள் தல்மா 33, கியானினா 31, மற்றும் நெருங்கிய உறவினர்கள் பங்கேற்றனர்.