- தடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்த மோடி
- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்

காலை 5.30 மணிக்கே ஓட்டுப்பதிவு: சுப்ரீம் கோர்ட் யோசனை
வெயில் காரணமாக லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவை காலை 5.30 மணிக்கே துவங்கலாமே என தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் யோசனை உள்ளது.

வெயில் அதிகமாக இருக்கும் கோடை காலத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாகவும், ரம்ஜான் மாதம் துவங்குவதால் ஓட்டுப்பதிவை முன்கூட்டியே துவங்க வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் ஓட்டுப்பதிவை காலை 5.30 மணிக்கே துவங்கலாமே. வெயில் காரணமாக பிற்பகலுக்கு பிறகு ஓட்டளிக்க மக்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள்.
ரம்ஜான் மாதமும் துவங்கி உள்ளதால் காலை 7 மணிக்கு பதிலாக 5.30 மணிக்கே ஓட்டுப்பதிவை துவங்கலாமே என தெரிவித்துள்ளது. இந்த யோசனையை தேர்தல் கமிஷன் பரிந்துரைக்க வேண்டும் எனவும், அடுத்துள்ள 3 கட்ட தேர்தல்களின் ஓட்டுப்பதிவை காலை 5.30 மணிக்கே துவங்க ஏற்பாடு செய்வது குறித்து முடிவு எடுக்க வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தி உள்ளது.