காலிஸ்தான் பயங்கரவாதிக்கு மேல்சபையில் இடமளிக்க பிரிட்டன் தொழிலாளர் கட்சி மறுப்பு !!

அமெரிக்கா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்ட சீக்கியர்கள் பலர் காலிஸ்தான் பயங்கரவாதிகளால் மூளைசலவை செய்யப்படுகின்றனர். பஞ்சாபை இந்தியாவிடம் இருந்து பிரித்து தனிநாடாக்கக் கோரும் இவர்களது கோரிக்கையை இந்திய அரசு நீண்ட நெடுங்காலமாகவே நிராகரித்து வருகிறது.

சீக்கிய இளைஞர்கள் அமைப்பு என்ற போர்வையில் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு உலகெங்கிலும் வாழும் சீக்கிய இளைஞர்களை திசைதிருப்பி வருகின்றது. இந்த அமைப்புக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. பிரிட்டனில் 2003-ஆம் ஆண்டு இந்த இளைஞர்கள் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது.

ஆனால் இந்தத் தடை காலிஸ்தான் பயங்கரவாதிகளின் சூழ்ச்சியால் 2016-ஆம் ஆண்டு நீக்கப்பட்டது. தற்போது காலிஸ்தான்-ஐ சேர்ந்த மூத்த உறுப்பினர்கள் பலர் பிரிட்டனின் மேல்சபையில் (ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ்) இடம் பிடிக்க முயன்று வருகின்றனர். அரசு அதிகாரத்தை கைப்பற்றினால் இவர்களது பயங்கரவாத செயல்கள் எளிதில் நிறைவேறும் என காலிஸ்தான் அமைப்பினர் நம்புகின்றனர்.

இந்தியாவுடன் நட்பு பாராட்டிவரும் பிரிட்டன் அரசு தற்போது ஒரு வியக்கத்தக்க செயலை செய்துள்ளது.
பிரிட்டனின் மிகப்பெரிய தேசிய கட்சிகளில் ஒன்றான தொழிலாளர் கட்சியின் மேல்சபை உறுப்பினர் தேர்தலுக்கு காலிஸ்தான் மூத்த உறுப்பினர் டப்பின்தர்ஜித் சிங் சித்து விண்ணப்பித்திருந்தார். இவரது விண்ணப்பம் பிரதமரின் ஒப்புதலுக்கும், பக்கிங்காம் அரண்மனையின் அனுமதிக்கும் சென்றுவிட்டது.

ஆனால் தற்போதைய இவரது பூர்வீகம் குறித்து விசாரித்த தொழிலாளர் கட்சி, இவரது விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது. இந்தியாவில் தனிநாடுகோரி பயங்கரவாதத்தில் ஈடுபடும் காலிஸ்தான் அமைப்புக்கு தொழிலாளர் கட்சி துணைபோக மறுக்கிறது. இது பிரிட்டன் வாழ் இந்தியர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றுள்ளது.