- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்

கார்த்தி சிதம்பரத்தை 15 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ கோரிக்கை
ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திற்கு விதிகளை மீறி அந்நிய முதலீடுகளை பெற்று தந்த வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது.
லண்டனில் இருந்து இன்று காலை சென்னை திரும்பிய கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் விமான நிலையத்தில் கைது செய்தனர். ஐஎன்எக்ஸ் மீடியா சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கார்த்தி ஒத்துழைக்கவில்லை எனக்கூறி, அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கார்த்தி சிதம்பரம் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்குப் பிறகு தற்போது சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.
கார்த்தி சிதம்பரத்தை 15 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ கோரிக்கை வைத்து உள்ளது.
22 மணி நேரத்திற்கும் மேலாக கார்த்தி சிதம்பரத்திடம் சிபிஐ விசாரித்து இருக்கிறது. கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய எந்தவித அடிப்படை முகாந்திரமும் இல்லை.
கார்த்தி சிதம்பரம் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க தயார் என கார்த்தி சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
விசாரணையின் போதும் கார்த்தி சிதம்பரம் மழுப்பலாக பதில் அளித்ததாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆதாரங்களுக்கு தவறான அறிக்கையை கார்த்தி சிதம்பரம் தந்ததால் விசாரணை முடிவடைய தாமதமானது என கூறி உள்ளது.