காங்.,கின் இடைக்கால தலைவராக 90 வயதாகும் மோதிலால் வோரா

காங்.,கின் இடைக்கால தலைவராக 90 வயதாகும் மோதிலால் வோரா நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

காங்., தலைவர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை ராகுல் இன்று முறைப்படி ஒப்படைத்தார். விரைவில் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் எனவும் ராகுல் தனது அறிவிப்பில் கூறி இருந்தார்.

ராகுல் ராஜினாமாவை அடுத்து கட்சியின் இடைக்கால தலைவராக மூத்த தலைவரான மோதிலால் வோரா நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் இதற்கு முன் 2 முறை ம.பி., முதல்வராக இருந்துள்ளார். உ.பி., கவர்னராகவும் பதவி வகித்துள்ளார். இவர் தற்போது ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்து வருகிறார்.