- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

கவிழ்ந்தார் குமாரசாமி; எழுவாரா எடியூரப்பா?
கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து தனது முதல்-மந்திரி பதவியை குமாரசாமி ராஜினாமா செய்தார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் காங் – மஜத கூட்டணி அரசு தோல்வி அடைந்த நிலையில் கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை குமாரசாமி வழங்கினார். கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமியின் ராஜினாமாவை ஏற்பதாக ஆளுநர் வஜூபாய் வாலா அறிவித்தார்.
புதிய அரசு அமையும் வரை காபந்து முதல்-மந்திரியாக குமாரசாமி தொடர வேண்டும் என்றும், நிர்வாக ரீதியாக எந்த முடிவுகளும் எடுக்க கூடாது எனவும் குமாரசாமிக்கு ஆளுநர் அறிவுறுத்தி உள்ளார்.
குமாரசாமி ஆட்சி கவிழ்ந்த நிலையில் நாளை கர்நாடக பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது.
எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு பின் பாஜக ஆட்சி அமைக்க எடியூரப்பா உரிமை கோருவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.