கவலையில் பேஸ்புக் நிறுவனர் மார்க் – இந்தியாவில் தடை ?

இந்தியா, டிக்டாக் ‘ஆப்’பை தடை செய்திருப்பது கவலையளிப்பதாக, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தனது நிறுவன ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்திய – சீன எல்லையில், கல்வான் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, தேசிய பாதுகாப்பு கருதி, டிக் டாக், ஹலோ, யுசி பிரவுசர், கேம் ஸ்கேனர் உள்ளிட்ட 59 சீன ‘ஆப்’களுக்கு இந்திய அரசு தடை விதித்தது. இந்த தடை, 200 மில்லியன் பயனாளர்களை கொண்ட டிக்டாக் நிறுவனத்துக்கு பெரும் இழப்பாக அமைந்தது. இந்நிலையில், இந்தியாவில் டிக்டாக் தடை விதிக்கப்பட்டதற்கு, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், தனது நிறுவன ஊழியர்களிடம் வருத்தம் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் மீதும் பல உலக நாடுகள் குற்றம்சாட்டியுள்ளன. அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில், தனது பயனாளர்களின் டேட்டாக்களை பகிர்ந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பேஸ்புக் பாதுகாப்பு குறித்து மத்திய அரசிடம் மார்க்குள் விளக்கமளித்திருந்தார். இந்நிலையில், டிக்டாக் போல், பேஸ்புக் மீதும் இந்தியா தடை விதிக்கலாம் என ஊழியர்களிடம் மார்க் வருந்தியுள்ளார்.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட ‘ஆப்’களை ராணுவ வீரர்கள் தங்கள் மொபைலிலிருந்து நீக்க வேண்டும் என இந்திய ராணுவம் சமீபத்தில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.