‘கழுகு 2’ படத்தின் ஷூட்டிங்: மூணாறில் தொடங்கியது!

சத்யசிவா இயக்கத்தில் 2012-ம் ஆண்டு ரிலீஸான படம் ‘கழுகு’. கிருஷ்ணா ஜோடியாக பிந்து மாதவி நடித்தார். கருணாஸ், தம்பி ராமையா, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்தனர். காமெடி த்ரில்லர் படமான இதற்கு சத்யா ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

திருப்பூர் பி.ஏ.கிருஷ்ணன் தயாரிக்கும் இந்தப் படத்தை, சிங்காரவேலன் வெளியிடுகிறார். இந்தப் படத்தின் முதல் பாகத்துக்கு கலவையான விமர்சனம் கிடைத்தது. அதில் இடம்பெற்ற ‘ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்’ பாடலும் இளைஞர்கள் மத்தியில் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.