”கலைமாமணி” சாகிர் உசேன் அவர்களின் தனிநடன நிகழ்ச்சி

கனடா வாழ் பரதநாட்டிய இரசிகை இரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவரும் உலகப் புகழ்பெற்ற நடனக் கலைஞருமான ”கலைமாமணி” சாகிர் உசேன் அவர்களின் தனிநடன நிகழ்ச்சி (சோலோ) இன்று சென்னை மாநகரில் உள்ள கலா மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.

மேற்படி நடன நிகழ்ச்சியில் கனடாவில் வாழ்ந்து வரும் நடன ஆசிரியை (சக்தி நர்த்தனாலயா அதிபர்) திருமதி ஜனனி ரவிசங்கர் அவர்களும் இன்னொரு நடன ஆசிரியையோடு இணைந்து ஒன்றாக நட்டுவாங்கம் செய்யும் சந்தர்ப்பம் கிட்டியது.
கனடாவில் பல ஆண்டுகள் ”கலைமாமணி” சாகிர் உசேன் அவர்களிடமும் ஆசிரியை அற்புதராணி அவர்களிடமும் நட்டுவாங்கம் கற்றுக்கொண்ட திருமதி ஜனனிக்கு இந்த சந்தர்ப்பத்தை வழங்கிய ”கலைமாமணி” சாகிர் உசேன் அவர்களுக்கு கனடா உதயன் நன்றியை தெரிவிக்கின்றது.

கனடா உதயன் செய்திப் பிரிவு